கென் கருணாஸின் அடுத்த பட இயக்குநர் இவர்தானா? வைரலாகும் தகவல்
Actor Ken Karuna Next Movie | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தென்னிந்திய மொழிகளில் படங்களில் நடித்து வரும் நடிகர் கென் கருணாஸ் அடுத்ததாக எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக வலம் வருபவர் நடிகர் கென் கருணாஸ் (Ken Karunaas). இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன போதே ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வந்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பலப் படங்களில் நடித்து வந்த நடிகர் கென் கருணாஸ் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவ்வாறான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் கென் கருணாஸ் கடந்த 2025-ம் ஆண்டில் அவர் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்தை அவரே எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர் நாயகனாக மட்டும் இன்றி அந்த யூத் படத்தின் மூலம் இயக்குநராகவும், பாடலாசிரியாராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் கென் கருணாஸ் நடிப்பில் அடுத்தடுத்து எந்தப் படங்கள் உருவாகும் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் கென் கருணாஸ் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜன் வகையரா என்ற படம் உருவாகி வருகின்றது. இந்தப் படம் அடுத்த 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




கென் கருணாஸின் அடுத்த பட இயக்குநர் இவர்தானா? வைரலாகும் தகவல்:
இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, ‘கட்டா குஸ்தி’ பட இயக்குனர் செல்லா அய்யாவுவுடன் இணையும் கென் கருணாஸ். கென் கருணாஸ், இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் ஆக்ஷன்-காமெடி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 40 முதல் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளது. கென் கருணாஸின் தந்தையான கருணாஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார்; மேலும், ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமும் இதில் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. கென் கருணாஸின் திரைப்பயணத்தில் இது ஒரு மிக முக்கியமான திரைப்படமாக அமையவுள்ளது.
Also Read… வெளியானது சந்தானத்தின் லவ் பைட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
BREAKING : Ken Karunas Next Film with #GattaKusthi Director Chella Ayyavu 🔥.
#KenKarunas is teaming up with director Chella Ayyavu for a big-budget action comedy entertainer👍🏻.
Shooting is expected to begin in early 2027. The film’s budget is reportedly in the ₹40 – 50 Cr range.
🏭 Produced by Ken Karunas father, Karunas, with a possible joint venture involving a major production house🤝.A major project in the making for Ken Karunas 👀🔥.
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) November 7, 2026
Also Read… லக்சுரி பட்ஜெட் குறித்து முனியம்மாளிடம் கேள்வி எழுப்பும் விஜய் சேதுபதி… வைரலாகும் வீடியோ!