AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rising Stars Asia Cup 2026: இந்திய அணியில் திடீர் மாற்றம்.. நீக்கப்பட்ட படிதார்..! துணை கேப்டனாக இவரா..?

India A Squad Shake-Up: காயம் காரணமாக ரஜத் படிதார் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஆயுஷ் படோனி இந்தியா 'ஏ' அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், ரிங்கு சிங் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். திலக் வர்மா தலைமையில் நவம்பர் 19 முதல் தோஹாவில் போட்டி தொடங்கும்.

Rising Stars Asia Cup 2026: இந்திய அணியில் திடீர் மாற்றம்.. நீக்கப்பட்ட படிதார்..! துணை கேப்டனாக இவரா..?
இந்திய ஏ அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Nov 2026 15:43 PM IST

ரைசிங் ஸ்டார் ஆசிய கோப்பைக்கான (Rising Stars Asia Cup 2026) இந்தியா ‘ஏ’ அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ரஜத் படிதார், தற்போதைக்கு 50 ஓவர் போட்டியில் பங்கேற்க விரும்பவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ரஜத் படிதார் இத்தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணியிலிருந்து (Indian A Team) நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஆயுஷ் படோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ரிங்கு சிங் ரைசிங் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: 2026 ஆசிய கோப்பை.. திலக் வர்மா தலைமையில் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!

படிதார் விலகியதற்கு காரணம் என்ன..?


பிசிசிஐ வெளியிட்ட ஒரு புதிய தகவலின்படி, ரஜத் படிதார் தனது காயத்திலிருந்து குணமடைவதில் கவனம் செலுத்துமாறு பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, 50 ஓவர் போட்டிகளுக்கான தேர்வில் அவரைக் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவரது இந்த முடிவைத் தொடர்ந்து, ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்தியா ‘ஏ’ அணியிலிருந்து ரஜத் படிதார் விலக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ஆயுஷ் படோனியைத் தேர்வுக் குழு நியமித்துள்ளது.

ALSO READ: 2026 U19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! சேவாக், டிராவிட் மகன்கள் இடம்!

துணை கேப்டனாக ரிங்கு சிங்:

மேலும், இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் மற்றொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்வுக் குழு, ரிங்கு சிங்கை இந்தியா ‘ஏ’ அணியின் துணை கேப்டனாக நியமித்துள்ளது. திலக் வர்மா தொடர்ந்து அணியை வழிநடத்துவார். அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரப்சிம்ரன் சிங் போன்ற வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா ஆகிய இரண்டு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டித்தொடர் வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி முதல் தோஹாவில் நடைபெற உள்ளது. இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், லீக் சுற்றில் நேபாளம், பாகிஸ்தான் ‘ஏ’ மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை எதிர்கொள்ளும்.

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி விவரம்:

அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, பிரபாசிம்ரன் சிங், திலக் வர்மா, ரிங்கு சிங், குமார் குஷாக்ரா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகம், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியான், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான் மற்றும் ஆயுஷ் படோனி.

Follow Us