‘மேகதாது அணை கட்ட யாருடைய அனுமதியும் தேவையில்லை’ – முதல்வர் விஜய்க்கு கர்நாடகா முதல்வர் பதில்
Mekedatu Dam Controversy : மேகதாதுவில் அணை கட்ட, தமிழ்நாடு உள்பட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் அணையால் தமிழ்நாட்டிற்கே அதிக பலன் கிடைக்கும் என்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு கர்நாடக முதல்வர் சிவகுமார் பதிலளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பெங்களூரு, நவம்பர் 8 : தமிழ்நாடு உட்பட காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் (CM Joseph Vijay) கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்ட, தமிழ்நாடு உள்பட யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும் அணையால் தமிழ்நாட்டிற்கே அதிக பலன் கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்க்கு கர்நாடகா முதல்வர் பதில்
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக முதல்வருக்கு சட்டம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மேகதாதுவில் அணை கட்ட யாரிடமும் அனுமதியும் தேவையில்லை உச்ச நீதிமன்றமே ஏற்கனவே அனுமதி அளித்துள்ளதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கர்நாடகா மாநில நிலப்பரப்பில் அணை கட்ட உரிமை உள்ளது. அதேசமயம், தமிழ்நாட்டிற்கு 177 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது என்றார்.
இதையும் படிக்க : குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றுதான் கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!




மேலும் மேகதாது அணையால் இரு மாநிலங்களுக்கும் பயனளிக்கும். நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மேகதாது அணை பெரிதும் பயனளிக்கும் என்றார். குறிப்பாக மேகதாது அணையால் தமிழ்நாடு தான் அதிகம் பயனடையும். மேலும் அணை கட்டும் இடத்தை ஈடு செய்யும் வகையில் 5,400 ஹெக்டேர் நிலப்பரப்பில் காடு வளர்ப்பு திட்டத்தை கர்நாடகா ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததும் அணை கட்ட விண்ணப்பிப்போம். மத்திய நதிநீர் ஆணையம் இதுகுறித்து முடிவெடுக்கும். இதில் தமிழ்நாடு மிக உறுதியாக உள்ளது.
தயவுசெய்து ஒரு குழுவை அனுப்பி வையுங்கள் என தமிழக முதல்வருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். நாங்கள் நீரைத் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். இந்த விவகாரத்தில் சண்டையிடுவதற்கே இடமில்லை.அதற்கான காலம் முடிந்து விட்டது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது. நீரைப் பகிர்ந்து கொள்வது இரு மாநிலங்களிலும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் என்றார்.
பிரதமருக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம்
முன்னதாக தமிழக முதல்வர் விஜய் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில், தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திடவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை கட்டும் இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் அண்மையில் பார்வையிட்டது சரியல்ல. மேலும் கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ மற்றும் நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. ரூ.2 லட்சம் பரிசு.. நம்மாழ்வார் விருது பெற விண்ணப்பிக்கலாம்!
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசின திட்டம், தமிழ்நாட்டுக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.