AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அனிருத்தின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்தின் குடும்பம்!

Superstar Rajinikanth and family off to Anirudh wedding | இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து ரஜினிகாந்த் குடும்பட்த்துடன் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அனிருத்தின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்தின் குடும்பம்!
ரஜினிகாந்த் - அனிருத்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2026 13:50 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரது இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் உச்ச நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இத்தனை ஆண்டுகளாக எலிஜிபல் பேச்சுளராக வலம் வந்தார். இந்த நிலையில் அவர் பல காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுடம் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த வதந்திகள் அனைத்தையும் உண்மையாக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிருத் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களின் திருமணம் எங்கு நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அனிருத்தின் திருமணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட ரஜினி:

இந்த நிலையில் வருகின்ற 11-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு அனிருத் மற்றும் காவ்யா மாறனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில் அனிருத் உறவினர்களான ரஜினிகாந்தின் குடும்பத்தினர் மற்றும் காவ்யா மாறனின் உறவினர்களான திமுக தலைவர் எம்.கே.ஸ்டாலின் குடும்பத்தினர் சென்னையில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… ஃபயரு… ஃபயரு… ஃபயரு… வெளியானது அரசன் படத்தின் ஃபயர் கிளிம்ஸ் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷின் ஓம் படத்திலிருந்து வெளியானது ஃப ஃப ஃப பாடல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Follow Us