AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டோரதி படத்தில் உங்களை கொலை செய்தது யார்? கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய விசயம்!

Actress Keerthy Suresh Recent Interview | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டோரதி படத்தில் கொலை செய்யப்பட்டது குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டோரதி படத்தில் உங்களை கொலை செய்தது யார்? கீர்த்தி சுரேஷ் சொன்ன சுவாரஸ்ய விசயம்!
டோரதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2026 14:56 PM IST

மலையாள சினிமாவில் நடிகையாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கி தற்போது தென்னிந்திய மொழிகளில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நிலையில் இறுதியாக தமிழ் சினிமாவில் டோரதி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களிடையே அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டோரதி படத்தில் தனது கதாப்பாத்திரம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டோரதி படத்தில் உங்களை கொலை செய்தது யார்? கீர்த்தி சுரேஷ் விளக்கம்:

எனக்கும் கூட, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நேர்ந்தது என்பதை ஏன் காட்டவில்லை என்ற கேள்வி இருந்தது. இது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் கேட்டேன். அவர் கதையை ஒரு தெளிவற்ற முடிவோடு (open-ended) வைத்திருக்க விரும்பினார். பெரும்பாலான படங்களில், ஒரு கதாபாத்திரம் எப்படி இறந்தது என்பதையும், அந்த மரணத்திற்கான காரணத்தையும் நாம் காட்டுகிறோம்.

எனவே, இயல்பாகவே நம் மனதில் இத்தகைய கேள்விகள் எழுகின்றன. ஆனால், டோரதி கதையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அந்த வழக்கமான பாணியை மாற்ற விரும்பினார். அவள் எப்படி இறந்தாள் என்பதை ஏன் காட்ட வேண்டும்? அவள் எப்படி இறந்திருக்கக்கூடும் என்பதை நீங்களே கற்பனை செய்து சிந்தித்துப் பார்க்கலாமே என்று தெரிவித்துள்ளார்.

Also Read… பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எப்போதும் நடைபெறாத ஒன்று… வைரலாகும் புரோமோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசியல் மீது வெறுப்பு இல்லை… ஆனால் – சூர்யா சொன்னது இதுதானா?

Follow Us