பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எப்போதும் நடைபெறாத ஒன்று… வைரலாகும் புரோமோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை எப்போதும் நடைபெறாத நிகழ்வு ஒன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 10-வது வாரம் நடைபெற உள்ளதாக தற்போது முதல் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு 6-ம் தேதி முதல் தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. தொடர்ந்து இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கி 9 வாரங்கள் முடிவடைந்து தற்போது 10-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் முழுவது நடைப்பெற்ற டாஸ்க் சுவாரஸ்யமானது என்றாலும் அதனை போட்டியாளர்கள் சுவாரஸ்யமாக விளையாடினார்களா என்றால் அது கேள்விகுறியே. இப்படி இருக்கும் நிலையில் நேற்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 9-வது வார இறுதியில் வீட்டில் இருந்து இரண்டு நபர்கள் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். அதன்படி எவிக்ஷனில் இருந்த அக்ஷிதா மற்றும் அஸ்மிதா இருவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஜேசன் அவருக்கு பயன்படுத்தாமல் அவினாஷிற்காக பயன்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று வார இறுதி எபிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசும் போது கமல் சார் சொல்வது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதைப் போல கூறினார். அவர் நேற்று கூறியது இன்றைய எபிசோடிற்கு அப்படியே பொருந்தி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எப்போதும் நடைபெறாத ஒன்று:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் பத்து நிகழ்ச்சியில் 64-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வரலாற்றிலேயே எந்த மொழியிலும் இதுவரை நடைபெறாத ஒன்றாக இந்த நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு பிக்பாஸ் குரல் ஒலிக்காமல் அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக ஜூனியர் பிக்பாஸ் என்ற பதவியில் போட்டியாளர்களிலேயே ஒருவர் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த பதவியில் போட்டியாளர் வினோத் தேர்வானது போலவும் அந்த வீடியோவில் காட்டபட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸில் இந்த வாரம் ஒன்னு இல்ல ரெண்டு எவிக்ஷன் இருக்கு… வைரலாகும் தகவல்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day64 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/V7iIEUmiYG
— Vijay Television (@vijaytelevision) November 9, 2026
Also Read… பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் டிமாண்டி காலனி 3 படம் – வெளியானது அப்டேட்!