AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாடு முழுவதும் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 137 மருந்துகளுக்கு 96.45% வரை விலை குறைவு..

புற்றுநோய் சிகிச்சைக்கான காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்ட மருந்துகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2026 நிலவரப்படி, தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் விலையுடன் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியைச் சேர்த்து, மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) கணக்கிடப்படும்.

நாடு முழுவதும் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு! 137 மருந்துகளுக்கு 96.45% வரை விலை குறைவு..
Cancer Medicine
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Nov 2026 16:10 PM IST

நவம்பர் 9, 2026: புற்றுநோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 137 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசு அதிகபட்சமாக 96.45 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அக்டோபர் 17ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் விநியோகஸ்தர்கள் அல்லது மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யும் விலையின் அடிப்படையில், சில்லறை விலையை நிர்ணயிக்க வேண்டும். இதில் 30 சதவீத உச்சவரம்பை மீறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கான காப்புரிமை பெற்ற மருந்துகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துப் பொருட்கள் சேர்க்கப்பட்ட மருந்துகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மார்ச் 2026 நிலவரப்படி, தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தர்களிடம் வசூலிக்கும் விலையுடன் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டியைச் சேர்த்து, மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) கணக்கிடப்படும்.

ஆண்டுக்கு ரூ.3,540 கோடி சேமிப்பு

இந்த விலைக் குறைப்பின் மூலம் புற்றுநோயாளிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.3,540 கோடி வரை சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய விலைத் திருத்தத்தின் கீழ் மொத்தம் 534 மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

விலை விவரங்களை அறிய செயலி

மருந்துகளை வாங்குவதற்கு முன்பு அவற்றின் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக ‘Pharma Sahi Daam’ என்ற மொபைல் செயலியைப் பயன்படுத்தலாம். இந்தச் செயலியில் NPPA கட்டுப்பாட்டில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளின் விலை விவரங்களை அறிய முடியும்.

மேலும் படிக்க: ‘நக்சலைட்டுகள் தோற்கடிக்கப்பட வேண்டும்’ – ராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி

மருந்துக் கடைகள் விலைக் குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்காமல், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக வசூலித்தால், 1800-111-255 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.

எப்படி விலை கணக்கிடப்படும்?

உதாரணமாக, ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் தனது மருந்தை விநியோகஸ்தருக்கு ரூ.70-க்கு விற்பனை செய்கிறது என வைத்துக்கொள்வோம். அதற்கான ஜிஎஸ்டியைச் சேர்த்த பிறகு கிடைக்கும் தொகையே புதிய அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்படும். தற்போதைய விலை இந்தப் புதிய விலையைவிட அதிகமாக இருந்தால், நுகர்வோருக்கு விலைக் குறைப்பு கிடைக்கும். மாறாக, தற்போதைய விலை புதிய விலையைவிடக் குறைவாக இருந்தால், பழைய விலையே தொடரும்.

மேலும் படிக்க: துக்கமாக மாறிய தீபாவளி.. தீ விபத்தில் ஒரே வீட்டில் 6 பேர் பலி.. மத்தியப்பிரதேசத்தில் சோகம்!

எனவே, அனைத்து புற்றுநோய் மருந்துகளின் விலையும் 30 சதவீதம் குறையும் என்று இதற்குப் பொருள் அல்ல. தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்யும் விலை மற்றும் அதற்கான ஜிஎஸ்டி ஆகியவற்றின் அடிப்படையிலேயே புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

முக்கிய மருந்துகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப், நிவோலுமாப், ஒசிமெர்டினிப், பால்போசிக்லிப், அபேமாசிக்லிப் உள்ளிட்ட 137 மருந்துகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

மேலும், பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்துகளின் அனைத்து வகைகள், வெவ்வேறு அளவுகள், மருந்து வடிவங்கள் மற்றும் கூட்டு மருந்துகளுக்கும் இந்த விலை நிர்ணயம் பொருந்தும். தேவைக்கேற்ப புற்றுநோய் மருந்துகளின் பட்டியலை அவ்வப்போது மறுஆய்வு செய்து மாற்றியமைக்கவும் NPPA திட்டமிட்டுள்ளது.

Follow Us