ஏரியில் குளிக்க சென்ற 4 மாணவிகள் உள்பட 5 பேர்.. அடுத்தடுத்து நீரில் மூழ்கி மரணம்.. திருவண்ணாமலையில் பெரும் சோகம்!
Tiruvannamalai 5 People Drown In Lake : திருவண்ணாமலையில் ஏரியில் குளிக்க சென்ற 4 பள்ளி மாணவிகள் உள்பட 5 பேர் பரிதாபமான முறையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர் . இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரியில் குளிக்க சென்ற 4 மாணவிகள் உள்ட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில் அரசு பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கி இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று பண்டிகை என்பதால் விடுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, விடுதியில் தங்கி இருந்து வரும் மாணவிகளான அல்லி, வள்ளியம்மாள், விஜயலட்சுமி, பூமிகா ஆகிய மாணவிகளும் 4 மாணவிகளும், விடுதி பாதுகாவலர் தேன்மொழி ஆகியோர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள், அந்தப் பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மாணவி நீரில் மூழ்கத் தொடங்கினார்.
ஏரி நீரில் அடுத்தடுத்து மூழ்கிய மாணவிகள்
இதைப் பார்த்த சக மாணவி ஒருவர் அவரை மீட்பதற்காக சென்றார். அப்போது, அவரும் தண்ணீரில் மூழ்கிய நிலையில், இருவரையும் மீட்பதற்காக மாணவிகளும் சென்ற நிலையில் 4 மாணவிகளும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்க தொடங்கினர். இதனை சற்றும் எதிர்பாராத விடுதியின் பெண் பாதுகாவலர் தேன்மொழி விரைந்து அவர்களை மீட்க முயற்சித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரும் நீரில் மூழ்கினார். இதன் காரணமாக, 5 பேரும் ஏரி நீரில் மூழ்கி மாயமாகினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: சாலையில் நின்றால் கொலை.. தவறை தட்டிகேட்டால் கொலை.. தவெக ஆட்சியில் ரெளடிகள் அச்சமின்றி நகர்வலம்.. எடப்பாடி!
அடுத்தடுத்து சடமாக மீட்கப்பட்ட மாணவிகள்
அத்துடன், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மூழ்கியவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். வெகு நேர தேடுதலுக்கு பின்னர் ஒவ்வொரு மனைவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இறுதியாக, பெண் தேன் மொழியும் சடலமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, 5 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை- பெரும் பரபரப்பு
அத்துடன் போலீசார் சம்பவத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை நாளில், ஏரியில் குளிப்பதற்காக சென்ற 4 விடுதி மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தட்டித் தூக்கிய சிவகாசி.. தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை.. வாய்யை பிளக்க வைத்த விருதுநகர்!