AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகரிக்க இதுவும் காரணமா? தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!

Facial Pigmentation: சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது, பருக்களைக் கிள்ளுவது, அடிக்கடி ஸ்கிரப் செய்வது போன்ற பழக்கங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் உருவாகக் காரணமாகலாம். எலுமிச்சைச் சாறு போன்ற வீட்டு வைத்தியங்கள் மற்றும் சருமத்திற்குப் பொருந்தாத அழகுசாதனப் பொருட்களும் சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு முறைகளைப் பின்பற்றி, கரும்புள்ளிகள் அதிகரித்தால் தோல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

முகத்தில் கரும்புள்ளிகள் அதிகரிக்க இதுவும் காரணமா? தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!
முகத்தில் கரும்புள்ளிகள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Nov 2026 17:30 PM IST

முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதற்கு சூரிய ஒளி, சருமப் பராமரிப்புத் தவறுகள் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது சருமத்தில் நிறமி அதிகரிக்க வழிவகுக்கும். முகத்தில் (Facial Pigmentation) உள்ள பருக்களைக் கிள்ளுவதால் வீக்கம் ஏற்பட்டு கரும்புள்ளிகள் உருவாகலாம். அடிக்கடி ஸ்கிரப் செய்வது சருமத்தின் இயற்கையான பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும். எலுமிச்சைச் சாறு போன்ற வீட்டு வைத்தியங்களை நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதும் எரிச்சலை ஏற்படுத்தலாம். சருமத்திற்குப் பொருந்தாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பராமரிப்பு முறைகளைப் பின்பற்றி, தேவைப்பட்டால் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

Also Read: முக அழகை மாற்ற வேண்டாம்! இயற்கை அழகை மெருகேற்றும் புதிய டிரெண்ட்

1. சன்ஸ்கிரீன் பயன்படுத்தாமல் இருப்பது

வெளியே செல்லும்போது மட்டுமின்றி, அன்றாடம் சருமத்தைப் பாதுகாப்பதும் அவசியம். பலர் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துகின்றனர். ஆனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, ஏற்கெனவே இருக்கும் கரும்புள்ளிகளையும் மேலும் கருமையாக்கலாம். எனவே, SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமப் பாதுகாப்பிற்கு உதவும்.

2. முகத்தில் உள்ள பருக்களை அடிக்கடி கிள்ளுவது

முகத்தில் பருக்கள் தோன்றும்போது அவற்றைக் கைகளால் அழுத்துவது அல்லது நகங்களால் கிள்ளுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். இவ்வாறு செய்வதால் சருமத்தில் காயம் மற்றும் வீக்கம் ஏற்படலாம். பருக்கள் மறைந்த பிறகும் அந்த இடத்தில் கருமையான தழும்புகள் உருவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, சருமத்தில் ஏற்படும் அழற்சிக்குப் பிறகு உருவாகும் கரும்புள்ளிகள் மறைவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம்.

3. அடிக்கடி முகத்தை ஸ்கிரப் செய்வது

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிகப்படியான ஸ்கிரப்பிங் சருமத்தின் இயற்கையான பாதுகாப்புப் படலத்தைப் பாதித்து எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இதன் விளைவாக சருமத்தில் கரும்புள்ளிகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற மென்மையான பராமரிப்பு முறைகளைப் பின்பற்றுவது நல்லது.

4. முகத்தில் எலுமிச்சை உள்ளிட்ட வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவது

கரும்புள்ளிகளை விரைவாகப் போக்கலாம் என்ற நம்பிக்கையில் சிலர் எலுமிச்சைச் சாறு, பற்பசை உள்ளிட்ட பொருட்களை நேரடியாக முகத்தில் தடவுகின்றனர். ஆனால் இவை சருமத்தில் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, சருமம் பாதிக்கப்பட்ட பிறகு கரும்புள்ளிகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் அனைத்து அழகுப் பராமரிப்பு முறைகளையும் பின்பற்றுவது பாதுகாப்பானதல்ல.

Also Read: முக அழகை மாற்ற வேண்டாம்! இயற்கை அழகை மெருகேற்றும் புதிய டிரெண்ட்

5. சருமத்திற்குப் பொருந்தாத அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது

மற்றவர்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் நமக்கும் பொருந்தும் என்று நினைத்து அவற்றைப் பயன்படுத்துவது தவறான பழக்கமாகும். சில கிரீம்கள், மேக்கப் பொருட்கள் மற்றும் சருமப் பராமரிப்புப் பொருட்களில் உள்ள மூலப்பொருட்கள் எரிச்சலை ஏற்படுத்தலாம். இதனால் பருக்கள் மற்றும் சரும அழற்சி ஏற்பட்டு, பின்னர் கரும்புள்ளிகள் உருவாகலாம். எனவே, சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பொருட்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.

Follow Us