சூர்யாவின் 49வது படத்தின் கதை இப்படியா இருக்கும்? டைட்டில் என்ன தெரியுமா?
Suriya and Mathimaran Pugazhendhi collaboration: மக்கள் மத்தியில் அதிகம் பேமஸான நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் சீன். இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில், இவர் மண்டாடி பட இயக்குநருடன் 49வது படத்தில் இணைகிறார் என கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் கதை மற்றும் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் தி ஒன் சூர்யா (The One Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் மட்டும் இந்த 2026ம் ஆண்டில் மட்டுமே கிட்டத்தட்ட 3 படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu), தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) மற்றும் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சீன் (Scene Movie) என மூன்று திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இறுதியாக தீபாவளியை முன்னிட்டு வெளியான சீன் படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகை நஸ்ரியாவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தனது 49வது படத்தை, மண்டாடி (Mandaadi) பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி (Mathimaran Pugazhendhi) இயக்கத்தில் இணைகிறார் என கூறப்பட்டது. தற்போது அந்த படத்தின் கதைக்களம் மற்றும் டைட்டில் தொடர்ப்பான் தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஜூனியர் பிக்பாஸிடம் சண்டைக்கு நிக்கும் சாதிகா… வைரலாகும் புரோமோ வீடியோ!
சூர்யா மற்றும் மதிமாறன் புகழேந்தியின் படத்தின் கதை மற்றும் டைட்டில்:
இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் தமிழில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த படம் மண்டாடி. இதில் சூரி ஹீரோவாக நடிக்க சிப்பான் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, சூர்யாவின் 49வது படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. இந்த படமும் மண்டாடி படத்தைப்போலவே கடல் சார்ந்த கதைக்களத்தை மையமாக கொண்டு இயக்கப்படவுள்ளதாம்.
இதையும் படிங்க: தனது அடுத்தப் படத்தின் ஊதியத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ள நடிகர் விஷால்? வைரலாகும் தகவல்
இந்நிலையில் இந்த படத்திற்கு படகோட்டி என டைட்டில் வைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். மேலும் இதை வீ க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா மற்றும் மதிமாறன் புகழேந்தி கூட்டணி படம் குறித்து வைரலாகும் பதிவு:
As Per VP – #Suriya49 Update 🔥
#Suriya is reportedly set to collaborate with director #MathimaranPugazhendhi for his next project. The director is said to be planning a sea-based film on the lines of Mandaadi.
There is a strong possibility that the film will be titled #PADAGOTTI.
This project is likely to be Suriya’s 49th film (Suriya49) and will be produced by Kalaipuli S. Thanu.
— Movie Tamil (@_MovieTamil) November 9, 2026
நடிகர் சூரியன் சீன் படத்திற்கு பிறகு இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 48 படத்தில் நடித்துவருகிறார். இந்த படமானது உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டுவரும் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகியாக நடிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.