AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சீன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்து மாதவன் அடுத்து இயக்கப்போவது யாரை? வைரலாகும் தகவல்

Director Jithu Madhavan Next Movie Update | மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் தமிழ் சினிமாவில் சீன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சீன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்து மாதவன் அடுத்து இயக்கப்போவது யாரை? வைரலாகும் தகவல்
ஜித்து மாதவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2026 11:43 AM IST

மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருபவர் இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலையாள சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வந்த இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் சூர்யாவை வைத்து சீன் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 06-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தற்போது உலக அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக எந்தப் படத்தை யாரை வைத்து இயக்குவார் என்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜித்து மாதவனின் அடுத்தப் படம் தொடர்பான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சீன் படத்தின் வெற்றி… ஜித்து மாதவன் அடுத்து இயக்கப்போவது யாரை?

அதன்படி நடிகர் சூர்யாவை வைத்து ஹிட் படத்தை தற்போது கொடுத்துள்ள ஜித்து மாதவன் மலையாள சினிமாவில் அடுத்ததாக நடிகர் துல்கர் சல்மானை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது. இந்தப் படம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் வீட்டில் போதைப்பொருள் சோதனை… முதல்வர் பதிலளிக்க கோரிக்கை!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Follow Us