AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதுச்சேரியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு திட்டம்.. ஈ.சி.ஆரில் பறந்த கார்.. தடுப்பு கம்பியில் மோதி விபத்து.. 6 மாணவர்கள் பலத்த காயம்!

Chennai ECR Car Accident : சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பிறந்தநாள் கொண்டாட காரில் சென்றபோது, சாலையோர தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 கல்லூரி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் பிறந்தநாள் பார்ட்டிக்கு திட்டம்.. ஈ.சி.ஆரில் பறந்த கார்.. தடுப்பு கம்பியில் மோதி விபத்து.. 6 மாணவர்கள் பலத்த காயம்!
விபத்துக்குள்ளான கார்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 11 Nov 2026 11:41 AM IST

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 6 கல்லூரி மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். சென்னையில் செயல்பட்டு வரும் கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்கள் தங்களது நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக புதுச்சேரி செல்ல திட்டமிட்டனர். அதன்படி, நண்பர்களான 6 மாணவர்களும் இன்று புதன்கிழமை ( நவம்பர் 11- ஆம் தேதி) அதிகாலை காரில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது, அதிகாலை நேரம் என்பதால் சாலையில் பெரிதளவு வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் தகளது காரை அதிவேகமாக இயக்கி உள்ளனர்.

சாலையோர தடுப்பு கம்பியில் மோதிய கார்

அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் தறிகெட்டு ஓடி சாலை ஓரம் இருந்த தடுப்பு கம்பியில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் உள்ளே பயணித்த 6 மாணவர்களும் பலத்த ரத்த காயம் அடைந்து வலியால் அலறி துடித்துக் கொண்டிருந்தனர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் தடுப்பு கம்பி காரின் முன்பகுதியை குத்திக் கிழித்து உள்ளே சென்றது. அப்போது, அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் மற்றும் அருகில் வசித்து வரும் பொதுமக்கள் விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க: சென்னை மக்கள் கவனத்துக்கு… 5 நாளுக்கு ஆதம்பாக்கம் பக்கம் போயிடாதீங்க.. போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு!

6 மாணவர்கள் பலத்த காயத்துடன் சிகிச்சை

அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் விபத்தில் சிக்கிய மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை

இதில், மாணவர்கள் காரை அதி வேகமாக ஒட்டியதே விபத்துக்கு காரணம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய மாணவர்களின் பெயர்கள், ஊர் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி… சேலத்தில் ரூ. 75 கோடி வங்கி கடன் மோசடி.. மாணவர்களை பலிகடாவாக்கிய கும்பல்!

Follow Us