AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சமயபுரம் இரட்டை கொலை வழக்கு.. தப்பியோட முயன்ற குற்றவாளி போலீசாரால் சுட்டுப் பிடிப்பு!!

Samayapuram double murder case: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தீபாவளி அன்று நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை ஆயுதம் கைப்பற்றும் போது போலீசார் சுடப் பிடித்தனர். காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமயபுரம் இரட்டை கொலை வழக்கு.. தப்பியோட முயன்ற குற்றவாளி போலீசாரால் சுட்டுப் பிடிப்பு!!
கொலையான சிறுவர்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Nov 2026 10:19 AM IST

திருச்சி, நவ.11: திருச்சி மாவட்டம் சமயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் அரங்கேறிய அதிர்ச்சிகரமான குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தீபாவளித் திருநாளன்று இரவு சமயபுரம் பகுதியில் நிகழ்ந்த இரட்டைக்கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இப்பகுதியில் விஷால் மற்றும் ராகுல் ஆகிய இரு இளைஞர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த சமயபுரம் காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிக்க: “தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிசிடிவி பொருத்துவது கட்டாயம்!”.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குற்றவாளிகள் பிடிபட்ட விதம், வாக்குமூலம்:

போலீசாரின் தொடர் விசாரணையில், இந்த இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தூத்துக்குடி பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனடியாகத் தூத்துக்குடிக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். விசாரணையின் போது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்துக் குற்றவாளிகளிடம் போலீசார் துருவித் துருவிக் கேள்வி எழுப்பினர். அப்போது, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள ஈச்சம்பட்டி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் பெரிய கிரவுண்ட் ரோடு பகுதியிலுள்ள புதர்களுக்கு இடையே ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றவாளிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலும் தற்காப்பு நடவடிக்கையும்:

இதனைக் கைப்பற்றுவதற்காகச் சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன், தலைமைக் காவலர் மோகன் மற்றும் காவல்துறையினர் அந்த ஆயுதங்களை மீட்டெடுக்கச் குற்றவாளிகளுடன் ஈச்சம்பட்டி பகுதிக்குச் சென்றனர். வாகனத்திலிருந்து இறங்கியதும், குற்றவாளியான சிவநேசன் திடீரென அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்துத் தலைமைக் காவலர் மோகன் மீது பலமாகத் தாக்கினான். இதில் பலத்த காயமடைந்த காவலர் மோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதனைத் தொடர்ந்து பெரிய அருவாளை எடுத்துக்கொண்டு மோகனை வெட்டுவதற்காக அவர் துரத்தியதைக் கண்ட ஆய்வாளர் குணசேகரன் எச்சரித்துள்ளார். மேலும் குற்றவாளி கல்லை வீசி காவல் துறையின் வாகனத்தின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினான். காவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், தப்பியோடுவதைத் தடுத்திடவும் காவல்துறையினர் மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையில் குற்றவாளி சிவநேசன் சுடப்பட்டுக் கைது செய்யப்பட்டான்.

இதையும் படிக்க: “ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாய இடமாற்றம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..

மருத்துவமனையில் அனுமதி, தொடர் விசாரணை:

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிவநேசனுக்கு முதற்கட்டமாகச் சமயபுரம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபாவளி இரவில் நடந்த இரட்டைக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியைக் காவல்துறையினர் துணிச்சலாகச் சுடப் பிடித்துள்ள இந்தச் சம்பவம் திருச்சி மாவட்டப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் குறித்தும், இதன் பின்னணியில் உள்ள பிற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தங்களது தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Follow Us