AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாபா முத்திரை – வைரலாகும் செய்தி

Baba symbol displayed at the front of actor Rajinikanth residence | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் பகுதியில் புதிதாக பாபா முத்திரை ஒன்று வைக்கப்பட்டுள்ளது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாபா முத்திரை – வைரலாகும் செய்தி
ரஜினிகாந்தின் இல்லம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 Sep 2026 13:03 PM IST

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்தாலும் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தமிழ் மக்களாக மட்டும் இல்லை உலக அளவில் பல நாடுகளில் உள்ள மக்களும் ரஜினிகாந்திற்கு ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் அடுத்தடுத்தப் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்த தர்மன் படம் வருகின்ற 2027-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவ்லகள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரணபலி படத்திலிருந்து வெளியானது ஏதய்யா சாமி பாடலின் லிரிக்கள் வீடியோ

ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாபா முத்திரை:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் படம் தொடர்பான செய்திகள் மட்டும் இன்றி அவரது சொந்த வாழ்க்கை தொடர்பான செய்திகளும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் தற்போது பராமறிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் இல்லத்தின் முன்பு பாபா முத்திரை பதியப்பட்டுள்ளது. அது தொடர்பான செய்திகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… ரஜினிகாந்தின் தர்மன் படத்தின் தற்போதைய நிலை என்ன? இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ஓபன் டாக்

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் பிரபலங்களின் வீடு:

சென்னையில் போயஸ் கார்டன் என்பது பிரபலங்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக உள்ளது. இது முதன்முதலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு இருந்ததால் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் இல்லமும் அங்கு அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் நடிகர் தனுஷ் தற்போது அதே போயஸ் கார்டன் பகுதியில் பெரிய பங்களா வீட்டை கட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us