வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது – மொத ராத்திரி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஞானவேல்!
Director Gnanavel praised Modha Rathiri movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஞானவேல். இவர் தற்போது நடிகர் சூர்யாவின் 48-வது படத்தினை இயக்கி வரும் நிலையில் மொத ராத்திரி படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஞானவேல். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் வேட்டைக்காரன். நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஞானவேல் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் உருவான ஜெய்பீம் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் 48-வது படத்தை இயக்குநர் ஞானவேல் எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகை கயாடு லோஹர் மற்றும் பல நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இயக்குநர் ஞானவேல் சமீபத்தில் மொத ராத்திரி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மொத ராத்திரி படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ஞானவேல்:
அதன்படி இயக்குநர் ஞானவேல் அந்த எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, மொத ராத்திரி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வந்தபிறகும் திரையரங்கில் கூட்டம் இருக்கிறது. திருமண வீடுகளில் நடக்கும் அபத்தங்களைத் தோலுரித்து, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, மிகத்திறமையான நடிகர்கள் என அனைத்து திறமைசாலிகளும் விருந்து வைக்கிறார்கள். திரைப்படத்தைப் போலவே இயக்குனரின் நேர்காணல்களுக்கு ரசிகனாகி இருக்கிறேன். ராஜா கருப்பசாமி தமிழ் சினிமாவுக்கு நல்வரவு மட்டுமல்ல.. நம்பிக்கை வரவு.. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்.. என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் ஞானவேல் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ModhaRathiri திரைப்படம் #netflix தளத்தில் வந்தபிறகும் திரையரங்கில் கூட்டம் இருக்கிறது. திருமண வீடுகளில் நடக்கும் அபத்தங்களைத் தோலுரித்து, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல ஒவ்வொரு காட்சியும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை,…
— Gnanavel (@tjgnan) September 21, 2026
Also Read… 72வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எப்போது? முழுமையான விவரம் இதோ