AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நந்தன் பயணம் இன்னும் முடியவில்லை – இயக்குநர் சரவணன் வெளியிட்ட பதிவு

2 Years Of Nandhan Movie | நடிகர் சசிக்குமார் நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் நந்தன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இயக்குநர் சரவணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு.

நந்தன் பயணம் இன்னும் முடியவில்லை – இயக்குநர் சரவணன் வெளியிட்ட பதிவு
நந்தன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Sep 2026 14:40 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ரா சரவணன். அதன்படி இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் நரேன் நடிப்பில் வெளியான கத்துக்குட்டி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு நடிகர்கள் சசிகுமார் மற்றும் ஜோதிகா இருவரும் அண்ணன் தங்கையாக நடித்த உடன்பிறப்பே என்ற படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சரவணன் இயக்கத்தில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நந்தன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சசிக்குமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சுருதி பெரியசாமி, எஸ். மாதேஷ், மிதுன் போஸ், பாலாஜி சக்திவேல், கட்ட எறும்பு ஸ்டாலின், சமுத்திரக்கனி, வி ஞானவேலு, ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சரவண சக்தி உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தன் பயணம் இன்னும் முடியவில்லை – இயக்குநர் வெளியிட்ட பதிவு:

மேலும் இந்தப் படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சசிக்குமார் ஊராட்சி மன்ற தலைவராக ஆக வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட முற்படுகிறார். அப்போது அவரை ஆளும் தரப்பினர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இத்தனை துன்பங்களை தாண்டி சசிகுமார் தனது வாக்கையை எப்படி தக்கவைத்துள்ளார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இயக்குநர் சரவணன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ajith Kumar: சில நொடிகளுக்குள்ள முடிவெடுப்பதுதான் முக்கியம்.. வெளியானது அஜித் குமாரின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்!

இயக்குநர் சரவணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கல்யாணம்ன்றது 2 பேர் மனசு சம்மந்தப்பட்டது… ஓடிடியில் வெளியாகி உள்ள மொத ராத்திர படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Follow Us