AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Weather report: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Nadu weather today : மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 20, 2026 இன்று மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Weather report: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 20 Sep 2026 15:39 PM IST

சென்னை, செப்டம்பர் 20 : மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 20, 2026 இன்று மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் செப்டம்பர் 20, 2026 இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மற்றும் மிக கன மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : “கம்யூனிஸ்ட் தோழர்கள் பேசுவது வருத்தமளிக்கிறது!”.. சாட்டையை சுழற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 21, 2026 நாளை நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களிலும், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற செப்டம்பர் 22, 2026 மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : தருமபுரி அருகே பயங்கரம்.. மண்சரிவில் உருண்ட பாறை ரயில் மீது மோதி விபத்து.. ஓட்டுநரின் திறமையால் தப்பிய பயணிகள்!!

சென்னை வானிலை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் 20, 2026 இன்று மற்றும் செப்டம்பர் 21, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us