AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் லிஸ்ட் இதோ!

2026 Tamil Part 2 Movies: 2026ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதில் பார்ட் 2 படங்கள் பல உள்ளது. இந்நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாக காத்திருக்கும் பார்ட் 2 திரைப்படங்கள் என்னென்னெ என்பது குறித்த விவரமான லிஸ்ட் இதோ.

Barath Murugan
Barath Murugan | Published: 20 Sep 2026 15:00 PM IST
கோலிவுட் சினிமாவில் பல படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இந்த ஹிட்டான படங்களின் பாகம் 2-வும் உருவாக்கப்பட்டுவரும் நிலையில், பாகம் 1 படத்தை விடவும் இப்படத்திற்கு பிரம்மாண்ட எதிர்பார்ப்புகள் உள்ளது. அந்த விதத்தில் 2026ம் ஆண்டின் இறுதியில் வெளியாக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் எவை தெரியுமா?.

1 / 5
ஜெயிலர் 2: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பிலும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்திலும் பான் இந்திய படமாக உருவாகியுள்ளதுதான் ஜெயிலர் 2. இதில் பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். ஜெயிலர் 1ன் படத்தின் தொடர்ச்சியான கதையில் ஜெயிலர் 2 படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகிறது.

2 / 5
மீசையமுறுக்கு 2: நடிகரும், இசையமைப்பாளருமாக இருந்துவருபவர்தான் ஹிப்ஹாப் ஆதி. இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் மற்றும் சுந்தர் சி-யின் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம்தா மீசையமுறுக்கு 2. இப்படம் மீசையமுறுக்கு 1 படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுவித கதையில் உருவாகியுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாகிறது.

3 / 5
மூக்குத்தி அம்மன் 2: ஆர்.ஜே.பாலாஜி  மூக்குத்தி அம்மன் 1 படத்தை இயக்கிய நிலையில், பார்ட் 2 படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். இந்த படத்திலும் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள நிலையில், பான் இந்திய மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. இப்படம் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் வெளியாகிறதாம்.

4 / 5
டிமாண்டி காலனி 3: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்திலும், நடிகர் அருள்நிதியின் நடிப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படம்தான் டிமாண்டி காலனி 3. இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 / 5
Follow Us