பழம்பெரும் நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார் – சோகத்தில் குடும்பத்தினர்
Nadigar Thilagam Sivaji Ganesan’s eldest daughter Shanthi | தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராக மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ள மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உயிரிழந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக உள்ளவர் நடிகர் சிவாஜி கணேசன். நாடகங்களில் நடித்து வந்த இவர் பிறகு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த 1952-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான பராசக்தி என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து கடந்த 1999-ம் ஆண்டு வரை சினிமாவில் படங்களில் நடித்து வந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு உயிரிழந்தார். மேலும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மகன்கள் இருவரும் தற்போது சினிமா துறையிலேயே உள்ளனர். அதில் இளைய மகன் பிரபு நடிகராக வலம் வரும் நிலையில் மூத்த மகன் ராம் குமார் தந்தையின் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரடெக்ஷனை கவனத்தி வருகிறர்.
மேலும் இரண்டு மகள்களான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் தொழில் செய்வதில் கவனம் செலுத்தி வந்தனர். தனது மகள் மீது கொண்ட பாசத்தில் நடிகர் சிவாஜி கணேசன் தான் கட்டிய திரையரங்கிற்கு சாந்தி என்று பெயர் வைத்து இருந்தார். தற்போது அந்த இடத்தில் ஒரு காம்ப்ளக்ஸ் உருவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.




பழம்பெரும் நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்:
இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து இரங்கல் செய்தியை வெளியிட்டு வருகின்றனர். மேலும் சோகத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து ஆருதல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செய்தி குடும்பத்தினரை மட்டும் இன்றி திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Jason Sanjay: இளைய தளபதி என கேட்ட குரல்…. சட்டென ரியாக்ட் செய்த ஜேசன் சஞ்சய்..!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
செப்டம்பர் 20#BreakingNews
Heartfelt Condolences
Shri Sivaji Ganesan’s Daughter and
Mr Ramkumar, Mr Prabhu’s
Sister
Shanthi Narayanasamy
Passed Away
Early Morning#RIPShanthiNarayanasamy pic.twitter.com/MbQEhZm5Ln— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 20, 2026
Also Read… ஜேசன் மற்றும் சிக்மா படம் குறித்து பாராட்டி பேசிய நடிகர் சூரி