Anbil Avan: அதிரடி ஆக்ஷன் கதையில்… அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தனின் அன்பில் அவன் பட ட்ரெய்லர் வெளியீடு!
Anbil Avan Movie Trailer: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிப்பவர் அசோக் செல்வன். இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் புது திரைப்படம்தான் அன்பில் அவன். அதை முன்னிட்டு இப்படத்தின் அதிரடி மற்றும் காதல் கலந்த ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகர் அசோக் செல்வன் (Ashok Selvan) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புத்தம் புது திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). மணி ரத்தினம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அசோக் செல்வன் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இந்த படத்திற்கு பின் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் அன்பில் அவன் (Anbil Avan). இதை இயக்குநர் ஆர். கார்த்திகேயன் (R. Kaarthikeyan) இயக்க, ஐங்கரன் இன்டர்நெஷனல் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) நடித்துள்ளார்.
இந்த ஜோடி முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கும் நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. அந்த விதத்தில் இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதை நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: துருவ் விக்ரமின் ஜாக்கி.. ‘First Move’ ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!
சிலம்பரசன் பகிர்ந்த அசோக் செல்வனின் அன்பில் அவன் பட ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
Happy to launch the trailer of #AnbilAvan. Best wishes to @ashokselvan and the entire team.
– https://t.co/zPMYdyOkwx@Ayngaran_offl @HappyHighPic @PreityMukundan @Karti6Kane pic.twitter.com/DuR5sDucy9
— Silambarasan TR (@SilambarasanTR_) September 17, 2026
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் அன்பில் அவன் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இப்படத்தில் அசோக் செல்வன் சாதாரண குடும்ப ஆணாகவும், ப்ரீத்தி முகுந்தன் வசதியான வீட்டி பெண்ணாகவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இதனால் தங்களின் குடும்பத்தை விட்டு வேறொரு இடத்தில் தங்களின் திருமண உறவை தொடர்கிறார்கள். அந்த இடத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதையும் படிங்க: நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை.. ராஷ்மிகா பற்றி பேசிய கமல்ஹாசன்!
மேலும் இவர்கள் இருவருக்கும் அங்குள்ள ஒரு கேங்ஸ்டரால் பிரச்சனை ஏற்படுகிறது. இவாறாக அதிரடி ஆக்ஷன், காதல் மற்றும் ரோமெண்டிக் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகியிருப்பதாக தெரிகிறது. தற்போது வெளியான ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகிவருகிறது.
அன்பில் அவன் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:
இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தனுடன் முக்கியமான வேடத்தில் பழம்பெரும் நடிகை ரேவதி நடித்துள்ளார். இந்த படம் காதல் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாக்கப்ட்டுள்ளது. அதனால இப்படத்திற்கு யு/ஏ தரச் சென்சார் சான்றிதழ் கிடைத்திருக்கிறதாம். அதனால் 16 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.