AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kamal Haasan: நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை.. ராஷ்மிகா பற்றி பேசிய கமல்ஹாசன்!

Kamal Haasan Advises Rashmika: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் நாயகனாக இருந்துவருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் பட தொடக்கவிழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், ராஷ்மிகா மந்தனாவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kamal Haasan: நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை.. ராஷ்மிகா பற்றி பேசிய கமல்ஹாசன்!
கமல் ஹாசன் மற்றும் ராஷ்மிகாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Sep 2026 16:17 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் உலகநாயகன் கமல் ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). மணி ரத்தினம் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த திரைப்படத்திற்கு பிறகு, தற்போது சித்தா பட இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் (SU Arun Kumar) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் தெலுங்கில் இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் கல்கி 2 (Kalki 2) படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்து நடித்துவருகிறார்.

நேற்று (16/09/2026) சென்னையில் நடந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) பயோபிக் படத்தின் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர். அந்த விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசன் நடிகை ராஷ்மிகா மந்தவனுக்கு (Rashmika Mandanna) அட்வைஸ் கொடுத்துள்ளார். அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்க அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட ஒரு குணம் என்ன? விளக்கமான சொன்ன ஜேசன் சஞ்சய்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அட்வைஸ் சொன்ன கமல்ஹாசன்:

அந்த படத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி மேடையில் பேசிய கமல் ஹாசன், “ராஷ்மிகா, நான் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படவில்லை.. ஏனென்றால் என்னால் இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்க முடியாது.. என் தாடியை எடுத்தால்கூட. என்னால் அவ்வை சண்முகியாக நடிக்க முடியும், எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவாக நடிக்க முடியாது.. நான் நடுங்கிக்கொண்டிருப்பேன்.. அதனால், தைரியமாகச் செய்யுங்கள்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழில் கேப்டன் மீது அதிருப்தியில் இருக்கும் போட்டியாளர்கள் – வைரலாகும் தகவல்

ராஷ்மிகா குறித்து கமல்ஹாசன் பேசியதாக இணையத்தில் வைரலாகும் பதிவு:

இயக்குநர் கௌதம் திண்ணனுரி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் பயோ பிக் படம்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இதில் ராஷ்மிகா மந்தனா நாயாகியாக நடிக்கவுள்ள நிலையில், கீதா ஆதர்ச என்ற நிறுவனமானது தயாரிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதியில் கமல்ஹாசன் தொடங்கிவைத்துள்ளார். தற்போது இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us