இந்தப் படத்தின் மூலம் அனிருத்தின் இசைப் பயணம் மாறும் – நடிகர் கமல் ஹாசன்
Kamal Haasan talks about Anirudh Music | பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கமல் ஹாசன் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை வளர்ச்சி குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிரபலமாக இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பிரபல இசையமைப்பாளராக பிசியாக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த மூன்று படங்களும் விமர்சன ரீதியாக எப்படி வரவேற்பைப் பெற்றதோ இல்லையோ இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இந்த மூன்று படங்களிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மக்களிடையே வரவேற்பைப் பெறும் பாடல்களை இசையமைத்து வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் அனிருத் ரவிச்சந்தர் இசையில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து ஜெயிலர் 2, தி பாரடைஸ், கிங் ஆகியப் படங்கள் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் இசையமைக்கவும் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். அதன்படி தற்போது பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பயோபிக்கில் இசையமைப்ப ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு தொடங்கி வைத்த கமல் ஹாசன் அனிருத் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இந்தப் படத்தின் மூலம் அனிருத்தின் இசைப் பயணம் மாறும்:
அதன்படி கமல் ஹாசன் பேசியதாவது, பாலச்சந்தர் சாருக்கு அரங்கேற்றம் படம் எப்படி ஒரு திருப்புமுனையாக அமைந்ததோ, கே. விஸ்வநாத் அவர்களின் திரைப்பயணம் சங்கராபரணம் படத்திற்குப் பிறகு எப்படி மாறியதோ, அதேபோல இந்தப் படத்தின் மூலம் அனிருத்தின் இசைப் பயணமும் மாறப்போகிறது என்று நான் உணர்கிறேன். அது மாற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். தயவுசெய்து இதை அனிருத்திடம் தெரிவியுங்கள். ஏனெனில், அவர் இப்போது பயணிக்கும் விதம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் இன்னும் வெகுதூரம் செல்லவிருக்கிறார் என்று தெரிவித்து உள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஓடிடியில் வெளியாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KamalHaasan about #Anirudh ⭐:
“Just like Balachandar sir got a turnaround with #Arangetram, and just like K. Viswanath’s trajectory changed after #Sankarabharanam, I feel Anirudh’s musical trajectory is going to change with this film. I want it to change. Please convey this to…
— Movies Singapore (@MoviesSingapore) September 16, 2026