AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாகர்ஜுனா படத்தில் வில்லனாகும் நடிகர் அசோக் செல்வன்? வைரலாகும் தகவல்

Actor Ashok Selvan in King 100 Movie | தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தெலுங்கு சினிமவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் நாகர்ஜுனாவின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நாகர்ஜுனா படத்தில் வில்லனாகும் நடிகர் அசோக் செல்வன்? வைரலாகும் தகவல்
அசோக் செல்வன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Aug 2026 16:08 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தவர் நடிகர் அசோக் செல்வன். ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் அசோக் செல்வன் பிறகு தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், நித்தம் ஒரு வானம், போர்தொழில் மற்றும் ப்ளூ ஸ்டார் என பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்களில் வெளியாக உள்ள படம் அன்பில் அவன்.

இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி முகுந்தன் நாயகியாக நடித்து உள்ளார். தொடர்ந்து படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் வில்லனாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

நாகர்ஜுனா படத்தில் வில்லனாகும் நடிகர் அசோக் செல்வன்?

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் நாகார்ஜுனா தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் ரா கார்த்திக் இயக்கத்தில் ‘கிங் 100’ (KING 100) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தமிழ் நடிகர் அசோக் செல்வன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி (glimpse) விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படமாகும். இப்படம் 2027-ஆம் ஆண்டு சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஐ அம் கேம் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் இணைந்தது எப்படி? இயக்குநர் ஓபன் டாக்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனாவின் ரணபாலி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்

Follow Us