பென்ஸ் படக்குழுவினர் மீது அதிருப்தியில் இருக்கும் நிவின் பாலி – வைரலாகும் வீடியோ
Nivin Pauly disappointed with Benz movie team | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்களின் பணிகள் விறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நிவின் பாலி பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி அவ்வபோது தமிழ் மொழியிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பெத்தலேக குடும்ப யூனிட் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து திரையரங்குகளில் படம் மாபெரும் வெற்றிப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் நிவின் பாலி அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்தப் பேட்டியில் நடிகர் நிவின் பாலி தனது முந்தைய படங்கள் தற்போது வெளியான பெத்தலேக குடும்ப யூனிட் படம் மற்றும் அடுத்ததாக உருவாகி வரும் படம் தொடர்பான அப்டேட்கள் குறித்து பேசியுள்ளார். அதில் தமிழ் சினிமாவில் உருவாகி வரும் பென்ஸ் படம் குறித்து நடிகர் நிவின் பாலி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பென்ஸ் படக்குழுவினர் மீது அதிருப்தியில் இருக்கும் நிவின் பாலி:
அந்தப் பேட்டியில் நடிகர் நிவின் பாலி பேசியதாவது, பென்ஸுடனான (Benz) ஒப்பந்தத்தின் காரணமாக நான் இந்தப் படத்தை தொடர்ந்து முடிக்க வேண்டியுள்ளது. இன்னும் 35 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளன. நான் தொடர்ந்து தொடர்புகொண்டு பதிலுக்காகக் காத்திருக்கிறேன், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. நீங்கள் இந்தப் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தால், தயவுசெய்து என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஒரு முடிவை எடுங்கள் என்று பென்ஸ் படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தின் அலா பொலேலோ பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#NivinPauly Recent
– Because of my agreement with #Benz, I have to continue with this film, and I still have 35 days left.
– I’ve been calling and waiting for a response, but there’s been nothing. If you’re watching this interview, please understand my situation and take a…— Movie Tamil (@_MovieTamil) August 25, 2026
Also Read… டாக்ஸிக் பட விழாவில் தமிழில் பேசி அசத்திய நடிகர் யாஷ் – வைரலாகும் வீடியோ