ரதிமா ஏ ரதிமா.. சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸின் ரதிமா இண்டீ பாடல் வெளியீடு!
Radhimaa Video Song: தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் அபயங்கர். இவர் ஆண்டுதோறும் இண்டீ பாடலை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார். அந்த விதத்தில், 2026ம் ஆண்டில் வெளியான 2வது பாடல்தான் ரதிமா. தற்போது வெளியான இந்த வீடியோ பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
இளம் இசையமைப்பாளராக தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையில் இதுவரை மொத்தமாக 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியான கருப்பு திரைப்படம் (Karuppu) சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று உலகளவில் சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் சூர்யாவின் (Suriya) 48வது படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் 2024ம் ஆண்டில் கட்சி சேர (Katchi Sera) என்ற ஆல்பம் பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதையடுத்து ஆண்டுதோறும் 2 ஆல்பம் (இண்டீ) பாடல்களை வெளியிடுவதை சாய் அபயங்கர் வழக்கமாக வைத்துள்ளார். இந்த 2026ம் ஆண்டில் தொடக்கத்தில் பவள மல்லி என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
இதையடுத்து 2வது வெளியாகியுள்ள இண்டீ பாடல்தான் ரதிமா (Radhimaa). இதில் சாய் அபயங்கர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) இணைந்து நடனமாடியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: மயில் வீரா.. கார்த்தியின் சர்தார் 2 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சாய் அபயங்கர் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸின் ரதிமா பாடல் குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
Radhimaa is all yours ! ❤️
Audio OUT NOW 🎧❤️🩹 https://t.co/Ai8akrtuLL
Composed ,sung & produced by @SaiAbhyankkar
Lyricist- @Lyricist_Vivek
Female vocals – Nargis & Ashma#radhimaa #ThinkMusic #thinkindie #saiabhyankkar pic.twitter.com/GTuFFBvuGf— Think Music (@thinkmusicindia) August 24, 2026
இந்த பாடலை சாய் அப்யங்கர் பாடி, இசையமைத்து மற்றும் நடனமாடியுள்ளார். அவருடன் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸும் இந்த பாடலில் இணைந்து நடனமாடியுள்ளார். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தில் நாயகியாக நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வி என்ற கான்செப்டில் வெளியான இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதையும் படிங்க: டொவினோ தாமஸின் ஐடென்டிட்டி படத்தை பார்த்து இருக்கீங்களா? எந்த ஓடிடியில் பார்க்கலாம்
சாய் அபயங்கரின் புதிய திரைப்படங்கள் :
சாய் அபயங்கர் இறுதியாக சூர்யாவின் கருப்பு படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். இப்படம் சுமார் ரூ 300 கோடி வசூலித்து சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்திற்கு பின் அல்லு அர்ஜுனின் ராக்கா, சூர்யாவின் 48வது படம், தனுஷின் ஓம் மற்றும் தமிழ் முருகன் படம், பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் புது படம் மற்றும் கார்த்தியின் மார்ஷல் உட்பட பல்வேறு படங்களை தனது கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.