AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Radhimaa: சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸின் ரதிமா இண்டீ பாடல் புரோமோ வெளியானது!

Radhimaa Song Promo: இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள 6வது இண்டீ பாடல்தான் ரதிமா. இந்த பாடலானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 214ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று (22/08/2026) ரதிமா பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது வெளியான புரோமோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Radhimaa: சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸின் ரதிமா இண்டீ பாடல் புரோமோ வெளியானது!
ரதிமா இண்டீ பாடல் புரோமோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Aug 2026 23:30 PM IST

அல்லு அர்ஜுன் (Allu Arjun) முதல் சூர்யா (Suriya) வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களின் இசையமைப்பாளராக இருந்துவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). 2024ம் ஆண்டில் கட்சி சேர (Katchi Sera) என்ற இண்டீ பாடலின் மூலம் நுழைந்த இவர், தற்போது பான் இந்திய நாயகியாக இருந்துவருகிறார்.இவரின் இசையமைப்பில் இதுவரை மொத்தமே 3 படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த படங்களின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் மேலும் பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் இண்டீ பாடலின் மூலம் இவர் பிரபலமான நிலையில், ஆவர் ஆண்டுதோறும் 2 பாடல்களை வெளியிடுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.

அந்த விதத்தில் 2026ம் ஆண்டில் பவள மல்லி (Pavazha Malli) என்ற பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதையடுத்து 2வதாக வெளியாக தயாராகியுள்ள பாடல்தான் ரதிமா (Radhimaa). இது சாய் அபயங்கரின் 6வது இண்டீ பாடல் என்ற நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இன்று (22/08/2026) இதன் புரோமோ வீடியோவை சாய் அபயங்கர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ராம் அண்ட் லீலா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது!

சாய் அபயங்கரின் ரதிமா பாடலின் புரோமோ வீடியோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:

இந்த ரதிமா பாடலில் சாய் அபயங்கருடன், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் நடனமாடியுள்ளார். இவர் தமிழில் காந்தா திரைப்படத்தின் நடித்து பிரபலமானவர். மேலும் தற்போது சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் நாயகியாக நேரடியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். அந்த விதத்தில் இவருக்கு மேலும் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலத்தை சேர்க்கும் பாடலாக தற்போது ரதிமா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாய் அபயங்கரின் புதிய திரைப்படங்கள் லிஸ்ட்:

சாய் அபயங்கரின் இசையில் இறுதியாக வெளியான படம் கருப்பு. சூர்யாவின் நடிப்பில் வெளியான இந்த படமானது மாபெரும் வெற்றிபெற்று, கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த படத்திற்கு பின் இவரின் இசையில், கார்த்தியின் மார்ஷல், அல்லு அர்ஜுனின் ராக்கா, தனுஷின் ஓம், சூர்யாவின் 48வது படம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் புது படம் என எக்கச்சக்க படங்களை தன் வசம் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: இணையாத காதல்.. மீண்டும் ஒரு வாய்ப்பு.. வெளியானது அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்தின் ட்ரெய்லர்!

ஆரம்பத்தில் படங்களுக்கு ரூ 1 முதல் 2 கோடிகளை சம்பளமாக பெற்றுவந்த நிலையில், தற்போது ரூ 7 முதல் 8 கோடிகள் சம்பளமாக வாங்குகிறாராம். தற்போது இவருக்கு அதிக திரைப்படங்கள் வந்து குவிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us