இணையாத காதல்.. மீண்டும் ஒரு வாய்ப்பு.. வெளியானது அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் படத்தின் ட்ரெய்லர்!
Once More Movie Trailer: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்றவராக இருந்துவருபவர் அர்ஜுன் தாஸ். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் 2வது வெளியாக காத்திருக்கும் படம்தான் ஒன்ஸ் மோர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் முதல்வர் விஜய் (CM Vijay) நடித்திருந்த மாஸ்டர் (Master) திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் அர்ஜுன் தாஸ் (Arjun Das). இவர் இந்த படத்தின் வெற்றிக்கு பின், நாயகனாக சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் இரு பெரும் அரசியல் பிரபலன்களுடன் தனது திரையை பகிர்ந்துள்ளார். அது வேறுயாருமில்லை முதல்வர் விஜய், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண்தான். அந்த விதத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கான் சிட்டி (Con City). நகைச்சுவை மற்றும் கடத்தல் போன்ற கதையில் இது வெளியானது.
இந்த படத்திற்கு பின் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் (Vignesh Srikanth) இயக்கத்தில், இணைந்து நடித்துவந்த திரைப்படம் ஒன்ஸ் மோர் (Once More). இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் (Aditi Shankar) மற்றும் சோனா ஓலிக்கல் (Sona Olickal) போன்றவர்கள் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்று (22/08/2026) இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க: டிசி படத்தில் பார்வதியின் கேரக்டரை அப்படி காட்ட விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
From heartwarming romance to heartbreaking silence… ❤️
A rollercoaster of emotions awaits in theatres !! #OnceMore Trailer OUT NOW🎬✨
🔗 https://t.co/qMDJsGuuLkWritten & directed by @isrikanthmv 🎬
A @heshamawmusic musical 🎶 @iam_arjundas @AditiShankarofl @OlickalSona… pic.twitter.com/4pH837hzzb— Million Dollar Studios (@MillionOffl) August 22, 2026
அர்ஜுன் தாஸின் ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த ஒன்ஸ் மோர் படத்தின் ட்ரெய்லரில் பீல் குட் காதல் படமாக இது இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் முதல் காதல் தோல்வியின் காரணத்தால், 2வது காதலில் மற்றும் திருமணம் வாழ்க்கையில் நுழைய பயப்படும் ஆணாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, அவரையே நேசிக்கும் பெண்ணாக அதிதி ஷ்ங்கர் நடித்திருக்கிறார். மேலும் அறிமுக நடிகையாக நுழைந்துள்ள சோனா ஓலிக்கல் இப்படத்தில் அர்ஜுன் தாஸின் முதல் காதலியாக நடித்துள்ளார். இப்படம் ஒரு வித்தியாசமான பீல் குட் படமாகஉருவாகியிருப்பதாக ட்ரெய்லரில் தெரிகிறது.
ஒன்ஸ் மோர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் அப்டேட்:
இந்த ஒன்ஸ் மோர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் மிகவும் சிறப்பான பாடல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை இப்படத்திலிருந்து வெளியான பாடல்களை அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த ஒன்ஸ் மோர் படத்தில் அர்ஜுன் தாஸ், சோனா ஒலிக்கல், டிராவிட், அனுஷா பிரபு மற்றும் சித்ரா லக்ஷ்மணன் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்யாண விருந்து.. இளையராஜா இசையில் வெளியானது டோரதி பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!
இந்த திரைப்படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியில் வெளியாகிறது. இப்படத்துடன் நயன்தாரா மற்றும் கவின் நடித்த ஹாய் படமும் வெளியாகிறது. இந்த ஒன்ஸ் மோர் படமானது காதல் மற்றும் காதலுக்கு பின் இருக்கும் மற்றொரு வலக்கையை பற்றிய படமாகும். அதனால் இப்படத்திற்கு யு/ ஏ தரச் சான்றிதழை சென்சார் குழு பரிந்துரைத்துள்ளதாம்.