டிசி படத்தில் பார்வதியின் கேரக்டரை அப்படி காட்ட விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
Arun Matheswaran on DC Movie Parvathy Role: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியிருந்த திரைப்படம்தான் டிசி. இதை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க, சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்த விதத்தில் இப்படத்தில் சஞ்சனா நடித்திருந்த கதாபாத்திரம் எவ்வாறு அமையவேண்டும் என அருண் மாதேஸ்வரன் விரும்பினார் என்பது குறித்து பேசியுள்ளார்.
சினிமாவில் தனது திரைக்கதைகள் மற்றும் இயக்கத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran). இவர் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான ராக்கி (Rocky) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இதில் நடிகர் வசந்த் ரவி (Vasanth Ravi) நாயகனாக நடிக்க, சிறப்பான கதைக்களத்தில் உருவாகியிருந்தது. இந்த படத்திற்கு பின் கீர்த்தி சுரேஷின் (Keerthy Suresh) சாணி காயிதம், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த வரிசையில் 4வது இவரின் இயக்கத்தில் வெளியான படம் டிசி (DC).
இதில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் வாமிகா கபி (Wamiqa Gabbi) மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) போன்றவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இதில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்திருந்த பார்வதி கதாபாத்திரத்தை மாற்றியமைக்க விரும்பியது குறித்து அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அந்த கதாப்பாத்திரங்களுக்கு நிறைய நோ சொல்லிவிட்டேன் – நடிகர் அர்ஜுன் தாஸ்
டிசி படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்த கதாபாத்திரம் பற்றி அருண் மாதேஸ்வரன்:
நேர்காணலில் பேசிய அருண் மாதேஸ்வரன் அதில், “2009-ல் வெளியான அனுராக் காஷ்யப்பின் “Dev. D” திரைப்படத்தைப் பார்த்தபோதே, தேவ்தாஸ் மீதான முழு ஈர்ப்பும் எனக்கு ஏற்பட்டது. சரி, ஒரு ஆக்ஷன் படமாக எடுக்கக்கூடிய ஒரு கதை இதில் இருக்கிறது என்று நான் நினைத்தேன்.
இதையும் படிங்க: செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது…. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
இது Dev. D மற்றும் ‘பான்னி அண்ட் கிளைட்’ கதைகளின் கலவை போன்றது. மூலக்கதையில், பார்வதி (சஞ்சனா) சிறுவயது காதலி, ஆனால் இதில், நான் அதை ஒரு அந்நியரைப் போலக் காட்ட விரும்பினேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.
டிசி படத்தில் வசூல் விவரங்கள் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Massive Blockbuster #DC 🔥@Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP @editor_prasanna @skannanartdir @PC_stunts @kabilanchelliah @kuchirayar73 @RIAZtheboss pic.twitter.com/L1kiEqdINr
— Sun Pictures (@sunpictures) August 21, 2026
லோகேஷ் கனகராஜின் டிசி படமானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியாகி 2 வாரங்களை கடந்துள்ள நிலையில், இன்னும் சில திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. மேலும் இந்த படமானது தற்போதுவரை மொத்தமாக ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், 2026ம் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.