AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மாபெரும் பிளாக்பஸ்டர்.. ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம்!

DC Movie Box Office: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் டிசி. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம் இன்றுடன் (21/08/2026) வெளியாகி 15 நாட்களை நிறைவு செய்த நிலையில், உலகளாவிய வசூல் விவரத்தை படக்குழு அறிவித்துள்ளது.

மாபெரும் பிளாக்பஸ்டர்.. ரூ 100 கோடி கிளப்பில் இணைந்த லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம்!
டிசி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 21 Aug 2026 14:03 PM IST

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்பட்டவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவர் சினிமாவில் நுழைந்த சில ஆண்டுகளில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் கமல்ஹாசன் (Kamal Haansan) வரை பல்வேறு நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றிவிட்டார். இவ்வாறாக இயக்குநராக பணியாற்றிய இவர், ஹீரோவாக அறிமுகமாகியிருந்த முதல் திரைப்படம்தான் டிசி (DC). இதை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்திருந்தார்.

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் வாமிகா கபி போன்ற நடிகைகளும் இணைந்தது நடித்திருந்தனர். இந்த திரைப்படமானது வெளியாகி இன்றுடன் (21/08/2026) கிட்டத்தட்ட 15 நாட்களான நிலையில், உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரோம்-காம் பாணியில்… ரியோவின் ராம் அண்ட் லீலா திரைப்படம் எப்படி இருக்கு?

டிசி திரைப்படத்தின் 15வது நாள் வசூல் விவரம்:

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமான டிசி, வெறும் 15 நாட்களில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஒரு இயக்குநராக இருந்து, நடிகராக அறிமுகமாகி முதல் படத்திற்க்கே சுமார் ரூ 100 கோடி வசூல் பெறுவது மிகவும் கடினமான விஷயம். தமிழில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமான முதல் படத்லகே சுமார் ரூ 100 கோடி வசூலை பெற்றார். அவருக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீங்கள் பழைய நயன்தாராவைக் காணலாம்.. ஹாய் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நயன்தாரா சொன்ன விஷயம்!

டிசி திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

டிசி திரைப்படமானது உலகமெங்கும் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெருவருகிறது. இன்னும் சில திரையரங்குகளில் புது படங்கள் மத்தியிலும் டிசி படமானது வெளியாகியே வருகிறது. இந்த படத்தில் திரைக்கதை மற்றும் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், இசையமைப்பாளர் அனிருத்தின் இசையே இப்படத்தின் மாபெரும் தூணாக இருந்தது. இவரின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கும் மேலும் மெருகேற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us