Rio: ரோம்-காம் பாணியில்… ரியோவின் ராம் அண்ட் லீலா திரைப்படம் எப்படி இருக்கு?
Ram And Leela Review: சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் காலடிப்பதித்துவருபவர் ரியோ ராஜ். இவரியின் நடிப்பில் உருவாகியுள்ள 6வது திரைப்படம்தான் ராம் அண்ட் லீலா. இந்த திரைப்படம் இன்றுடன் (21/08/2026) திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழில் விஜய் டிவி தொலைக்காட்சியில் சின்னத்திரை நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரியோ ராஜ் (Rio Raj). இவர் தற்போது சினிமாவில் லீட் நடிகராக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இதுவரை 5 படங்கள் வெளியான நிலையில், 6வது படமாக இன்று (21/08/2026) வெளியான திரைப்படம்தான் ராம் அண்ட் லீலா (Ram And Leela). இதில் ரியோ ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை வர்த்திகா ஜெயின் (Vartika Jain) நடித்துள்ளார். இந்த படமானது ரோம்- காம் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், இதை அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் (Ramachandran Kannan) இயக்கியுள்ளார்.
இப்படத்தை தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தயாரிக்க, இசையமைப்பாளர் அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். இந்த படமானது இன்று முதல் உலகமெங்கும் வெளியான நிலையில், இதற்கு மக்கள் கொடுத்த விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… வைரலாகும் விஷ்ணு விஷாலின் அடுத்தப் படத்தின் அப்டேட்
ரியோ மற்றும் வர்த்திகாவின் ராம் அண்ட் லீலா திரைப்படம் எப்படி இருக்கு:
#RamAndLeela [3.5/5] : A Fun movie..
There is a big element of surprise in the movie, which was not revealed in the trailer.. Forms core..
So the movie revolves around it, lot of comic situations..
The lead pair @rio_raj and @024vartika make it work..
Rio brings out the… pic.twitter.com/hkpPUiWtW9
— Ramesh Bala (@rameshlaus) August 19, 2026
இந்த ராம் அண்ட் லீலா திரைப்படமானது பேண்டஸி மற்றும் ரோம்-காம் கதைக்களத்தில் அமைந்துள்ளது. இதில் ரியோ ராஜ் மிகவும் நேச்சுரலாக நடித்துள்ளார். அறிமுக நாயகியாக நுழைந்த வர்த்திகா ஜெயினின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு திரையரங்குகளில் மக்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது.
ரியோ மற்றும் வர்த்திகாவின் ஜோடியின் நடிப்பு எப்படி இருக்கு:
இந்த ராம் அண்ட் லீலா திரைப்படம் மிகவும் ஜாலியான படமாக உள்ளதாம். படத்தில் மிகப்பெரிய ஆச்சர்யமான விஷயம் உள்ளது, அது ட்ரெய்லரில் காட்டப்படாத ஒன்று. அதுவே இந்த படத்தின் மைய கருவாகும். எனவே அந்த படம் அதை சுற்றியே சுழல்கிறது. இதில் ரியோ மற்றும் வர்த்திகாவின் ஜோடி சிறப்பாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: வில்லியாக களமிறங்கும் ரெஜினா கசாண்ட்ரா.. எந்த படத்தில் தெரியுமா?
ராம் அண்ட் லீலா படத்தின் கதை என்ன:
இந்த படத்தில் ரியோ ராஜின் கதாபாத்திரத்தை விடவும் நாயகியான வர்த்திகாவின் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல், அவரின் புதிய அவதாரமே இப்படத்தின் மைய கருவாக அமைந்துள்ளது. ஆக மொத்தத்தில் ஒரு ஜாலியான படமாக இது அமைந்துள்ளதாம்.
ரியோவின் ராம் அண்ட் லீலா திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா:
இந்த படமானது முழுக்க பொழுதுபோக்கு கதைக்களத்தில் அமைந்துள்ளது. காமெடி, காதல் மற்றும் விறுவிறுப்பான திருப்பங்களை கொண்ட கதையை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கலாம். பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். இப்படத்திற்கு 5-க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.