இறுதிக்கட்டத்தை எட்டிய குக் வித் கோமாளி சீசன் 7.. கிராண்ட் பைனல் எப்போது தெரியுமா?
CWC 7 Finale Date: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நகைச்சுவை நிகழ்ச்சியாக இருந்துவருவது குக் வித் கோமாளி 7. இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பைனல் எப்போது என இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது அது குறித்து பார்க்கலாம்.
தமிழில் பிரபலமான சின்னத்திரை புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது குக் வித் கோமாளி (Cook With Comali). இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியானது விஜய் டிவியில் ஆண்டுதோறும் வெளியாகிவருகிறது. இறுதியாக நடந்த குக் வித் கோமாளி சீசன் 6ன் வின்னராக ராஜு ஜெயமோகன் (Raju Jayamohan) வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 7 (Cook With Comali 7) நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சின்னத்திரை பிரபலங்கள், தங்களின் வாழ்க்கை துணையுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இன்றுவரையிலும் ஓரளவு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுவருகிறது.
9 ஜோடி போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், இறுதியாக மொத்தம் 3 ஜோடி போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த ஜோடியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறார்கள். தற்போது குக் வித் கோமாளி 7 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், எப்போது முடியும் என இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: சாதாரண மக்களுக்கு இது வெறும் பொழுதுபோக்கு.. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் பற்றி அதிதி சங்கர் பேச்சு!
குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் எப்போது :
குக் வித் கோமாளி சீசன் 7ன் நிகழ்ச்சியின் நடுவராக ரோஜா, மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு மற்றும் கௌஷிக் ஷங்கர் போன்றவர்கள் நடுவர்களாக இருந்துவருகிறார். மொத்தம் 4 நடுவர்கள் மற்றும் 9 ஜோடி போட்டியாளர்கள் மற்றும் 6 கோமாளிகள் என இந்த நிகழ்ச்சியே சிறப்பாக தொடங்கியது. பின் சில விமர்சனங்களும் இந்த நிகழ்ச்சிக்கு எழுந்த நிலையிலம் தற்போது ஓரளவு வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நாயகனாக நடிப்பது இவரின் இயக்கத்திலா? வைரலாகும் தகவல்
தற்போது மூன்று ஜோடி போட்டியாளர்களுடன் இங்தக நிகழ்ச்சி நடைபெற்றுவரும் நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி குறித்த ப்ரோமோ வீடியோ பதிவு:
இப்போ தெரியுதா Comalis-ஓட வலி😤
இனி Couple Cooks-ஓட Double Trouble 😀 Cooku with Comali Season 7 – சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..#DoubleTrouble #CookuWithComaliSeason7 #CookuWithComali7 #CookuwithComali #CWC #VijayTelevision #VijayTV pic.twitter.com/oZ8Am9n6N4
— Vijay Television (@vijaytelevision) August 19, 2026
இந்த நிகழ்ச்சியானது நகைச்சுவை, சமையலை போன்ற ரசிகர்களை ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக இருந்துவருகிறது . இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 12 வாரங்களை கடந்திருக்கும், அந்த விதத்தில் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.