AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இது பிக் பாஸ் காமன் மேன் ஷோவா? இல்ல வேற எதுவுமா?- இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!

Bigg Boss The Common Man: விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 2026ம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 10 தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு சாமானிய மக்களை தேர்ந்தெடுக்கும் பிக் பாஸ் காமன் மேன் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டுவரும் நிலையில், அதன் மீது பல எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளது.

இது பிக் பாஸ் காமன் மேன் ஷோவா? இல்ல வேற எதுவுமா?- இணையத்தில் கொந்தளிக்கும் மக்கள்!
பிபி காமன் மேன் ஷோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Aug 2026 19:51 PM IST

தமிழ் மக்கள் மத்தியில் சிறப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது இந்தியாவில் முதல் முதலில் இந்தி மொழியில் கடந்த 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் (Salman Khan) தொகுத்துவழங்கிவருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சியானது கடந்த 2017ம் ஆண்டிலிருந்து தமிழிலிலும் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்துவழங்கிவந்த நிலையில், தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்த நிலையில், 2026ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) தொடங்கவுள்ளது. அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சாதாரணமான மக்களை இந்த நிகழ்ச்சிக்கும் தேர்ந்தெடுக்கும், பிக் பாஸ் தி காமன் மேன் (Bigg Boss The Common Man) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.

இந்த நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களும் கிளம்பிவருகிறது.

இதையும் படிங்க: கால்பந்து விளையாட்டில் சாதனைப்படைத்த அஜித் குமாரின் மகன் – வைரலாகும் ஷாலினி அஜித் பதிவு

மக்கள் மத்தியில் விமர்சனங்களுக்குள்ளாகும் பிக் பாஸ் தி காமன் மேன் ஷோ:

பிக் பாஸ் தி காமன் மேன் ஷோவானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியை கிருஷ்ணன் தொகுக்க, ஓவியா, ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நடுவராக உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் சாதாரணமான மக்கள் போட்டியாளர்களாக கலந்துகொள்கிறார்கள்.

இதையும் படிங்க: தங்கமே தளபதி.. முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்பட ஓடிடி ரிலீஸ் எப்போது? வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!

அதில், முதல் டாஸ்காக நாற்காலியில் இடம் பிடிப்பது, பேருந்தில் இடம்பிடிப்பது என அடித்துக்கொண்டு, தகராறில் போட்டியாளர்கள் இருப்பது போன்ற புரோமோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிவந்தது. இது தற்போது இணையவாசிகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களையும், எதிர்ப்பையும் ஏற்படுத்திவருகிறது.

பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியின் ப்ரோமோ குறித்து வெளியான பதிவு:

இந்த நிகழ்ச்சியானது தினமும் இரவு 10 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிவருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாலையில் 5:30 ஒளிபரப்பாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிக்கு விமர்சனங்கள் பிக் பாஸ் சீசன் 10 எவ்வாறு இருக்கும் என வட்டாரங்களில் கருத்துக்கள் வெளியாகிவருகிறது.

Follow Us