ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்த மாதம்பட்டி.. மகனுக்கு மொட்டையடித்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி!
Madhampatty Rangaraj Reunites with Joy Crizildaa; சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராகவும், சினிமாவில் நடிகராகவும் பணியாற்றியிருப்பவர் செஃப் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் தனது இரண்டாவது மனைவியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை பிரிந்திருந்த நிலையில், தனது மகனுக்காக ஒன்றிணைத்துள்ளனர். இது தொடர்பான பதிவு வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், மக்கள் மத்தியில் பிரபலமான செஃப்பாக இருந்துவருபவர் மாதம்பட்டி ரங்கராஜ் (Madhampatty Rangaraj). இவர் தமிழில் மெஹந்தி சர்க்கஸ் (Mehandi Circus) என்ற படத்தின் மூலம் நடிகராக நுழைந்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்திருந்தது. இந்த படத்திற்கு பின் கீர்த்தி சுரேஷின் (Keerthy Suresh) கணவனாக பெண் குயின் என்ற படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு மக்கள் மத்தியில் இவருக்கு பிரபலம் இருந்தது. அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி சீசன் 7ல் (Cook with Coomali Season 7) நடுவராக இருந்துவருகிறார். இதனால் மேலும் இவருக்கு மக்கள் மத்தியில் நெருக்கம் கிடைத்தது. இவ்வாறு பிரபலமாக இருந்த மாதம்பட்டி ரங்கரா, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா (Joy Crizildaa) என்பவரை திருமணம் செய்திருந்தார். பின் கருத்துவேறுபாடு காரணமாக பிரித்திருந்தனர்.
மேலும் ஜாய் கிரிசில்டா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில், அது தனது குழந்தை என நிரூபிக்க டிஎன்ஏ சோதனை செய்து, பின் தனது குழந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டார். அந்த வகையில், தனது மகன் ராகா ரங்கராஜிற்கு முதல் மொட்டையடித்து, தனது 2வது மனைவி ஜாய் கிரிசில்டாவுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: குடும்பங்கள் கொண்டாடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
2வது மனைவி ஜாய் கிரிசில்டாவுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ்:
View this post on Instagram
மாதம்பட்டி ரேஞ்சராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா இஒருவரும் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்திருந்தனர். பின் திருமணமான சில மாதங்களிலே கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். பின் பல்வேறு பிரச்சனைகள் நடந்த நிலையில், ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பிரித்திருந்தனர்.
இதையும் படிங்க: அம்மாவின் புடவை.. அழகிய ஸ்டில்ஸ்களை பகிர்ந்த திரிஷா கிருஷ்ணன்!
பின் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது மகனாக ராகா ரங்கராஜையும் மகனாக ஏற்றுக்கொண்டார். இது தொடர்பான பதிவையும் பகிர்ந்திருந்தார்.
தனது மகன் ராகா ரங்கராஜை ஏற்றுக்கொண்டது குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பதிவு:
View this post on Instagram
செஃப் மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி ரங்கராஜ் என்ற முதல் மனைவியும் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இன்னும் விவாகரத்து கூட நடக்கவில்லை என்ற நிலையிலும், இரண்டாவது மனைவியாக ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டார். ஸ்ருதி ரங்கராஜுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில், ஜாய் கிரீசில்டாவுக்கும் 1 ஆண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.