Trisha Krishnan: அம்மாவின் புடவை.. அழகிய ஸ்டில்ஸ்களை பகிர்ந்த திரிஷா கிருஷ்ணன்!
Trisha Krishnans Viral Instagram : தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் சமீபத்தில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்விற்காக அவர் அணிந்து சென்ற புடவையுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சவுத் இந்தியாவில் சிறந்த நடிகைகளில் முதன்மையானவராக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவரை ரசிகர்கள் சவுத் இந்திய குயின் என அழைக்கப்பட்டுவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கருப்பு (Karuppu). இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சூர்யா கருப்பசாமியாக நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்திற்கு பின் திரிஷா புது படங்களிலும் ஓப்பந்தமாகிவருகிறார். மேலும் கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியில், தமிழக அரசின் சார்பின் நடைபெற்றிருந்த 80வது சுதந்திர தின விழாவில் (80th Independence Day Celebration) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.
அந்த விழாவில், முதல்வர் விஜய்யின் (CM Vijay) தந்தை மற்றும் தாய் மற்றும் திரிஷாவின் அம்மா போன்றவர்களும் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் திரிஷா அணிந்திருந்த புடவையுடன் புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: பிரபாஸின் ஃபௌசி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
அம்மாவின் புடவையில் திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை திரிஷா கிருஷ்ணன், தனது அம்மாவின் புடவையில் தனது புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்ட திரிஷாவின் புடவை இணையத்தில் வைரலாகப் பேசப்போட்ட நிலையில், தற்போது, அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
திரிஷாவின் நடிப்பில் ஒத்திவைக்கப்பட்ட படங்கள் :
நடிகை திரிஷாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 திரைப்படங்கள் வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது. தெலுங்கில் ஸ்ரீசஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலுங்கு ஆடியன்ஸ் ரொம்ப ஸ்பெஷல்.. விஸ்வநாத் & சன்ஸ் பட வெற்றி விழாவில் சூர்யா பேச்சு!
மேலும் மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது தேதிகள் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில், கார்த்தி இணையும் 31வது படத்திலும் திரிஷாதான் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.