பிரபாஸின் ஃபௌசி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
Fauzi movie release update | தெலுங்கு மொழியில் முன்னணி நாயகனக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஃபௌசி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி ராஜா சாப். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்ட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து ஃபௌசி, ஸ்பிரிட், கல்கி 2 ஆகியப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஃபௌசி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரபாஸின் ஃபௌசி படத்தின் ரிலீஸ் எப்போது?
அதன்படி படக்குழு வெளியிட்டுள்ள சமீபத்திய எக்ஸ் தள பதிவில் 80-வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் ஃபௌசி படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் தெரிவித்துள்ளனர். அதன்படி படம் வருகின்ற டிசம்பர் மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ரஜினிகாந்த் சாரை முதன்முதலில் சந்தித்த போது… நடிகை ஸ்ரேயா சரணின் சுவாரஸ்ய பேச்சு
ஃபௌசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Before freedom became a celebration, it was a battle!
Saluting the spirit of every Fauzi who fought for our tomorrow 🙏🏼
Happy Independence Day 🇮🇳
– Team #FAUZI#Fauzi GRAND RELEASE WORLDWIDE ON 3rd DECEMBER 2026 ❤️🔥#FauziOnDec3
Rebel Star #Prabhas#Imanvi @hanurpudi… pic.twitter.com/6sznprM2nk
— Mythri Movie Makers (@MythriOfficial) August 15, 2026



