அமரன் பட இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் நடிகர் பிரபாஸ்?
Actor Prabhas: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் இயக்க்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான அமரன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக இவர் பிரபாஸை வைத்து படக் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு ரங்கூன் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Director Rajkumar Periyasamy). இந்தப் படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி வைத்தார். அமரன் என்று பெயர் வைக்கப்ட்ட இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் நிறுவனம் தயாரித்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த அமரன் படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்:
அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எந்த படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக டோலிவுட்டின் நட்சத்திர நடிகரகான பிரபாஸை அவர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் பிரபாஸை நேரில் சந்தித்து கதை கூறியுள்ளதகவும், அமரன் போல இந்தப் படமும் ராணுவம் தொடர்பான கதையாக இருப்பதாகவும், இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகர் பிரபாஸிற்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
பிரபாஸின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம்:
இயக்குநர் மாருதி எழுதி இயக்கி உள்ள தி ராஜா சாப் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இதில் பிரபாஸ் உடன் இணைந்து நடிகர்கள் மாளவிகா மோகனன், ரித்தி குமார், நிதி அகர்வால், சஞ்சய் தத், அனுபம் கெர், முரளி ஷர்மா என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
நடிகர் பிரபாஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram