சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் உலகளவில் டாப் 10ல் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம்!
Tourist Family: தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது உலக அளவில் சாதனைப் படைத்தது குறித்து இயக்குநர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நாயகனாக நடிக்க நடிகை சிம்ரன் (Actress Simran) நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், யோகிபாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தைப் பார்த்த மக்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தற்போது புதிய சாதனைப் படைத்ததை இயக்குநர் தனது எக்ஸ் தள பக்கதில் பகிர்ந்துள்ளார்.
உலக அளவில் சாதனைப் படைத்த சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படம்:
அதன்படி வருடம் வருடம் Letterboxd என்ற நிறுவனம் அந்த அந்த ஆண்டு வெளியாகி விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டில் உலக அளவில் வெளியாகி நல்ல வரவேற்வைப் பெற்ற படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.




அதில் முதல் இடத்தில் பிரபல ஹாலிவுட் படமான Sinners திரைப்படம் பிடித்துள்ளது. இந்த நிலையில் டாப் 10 பட்டியளில் தமிழில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் 9-வது இடத்தை பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
— Abishan Jeevinth (@Abishanjeevinth) July 6, 2025
இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்த கோலிவுட் பிரபலங்கள் ரஜினிகாந்த், சிவகார்திகேயன் உட்பட தென்னிந்திய பிரபலங்களான நானி உட்பட பலரும் இந்தப் படத்தைப் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக கோலிவுட் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளதாக சினிமா வட்ட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.