புஷ்பா படத்தில் அந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது – நடிகை ராஷ்மிகா மந்தனா
Actress Rashmika Mandanna: தனது ரசிகர்களால் நேஷ்னல் கிரஷ் என்று அன்புடன் அழைக்கப்படுவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் இறுதியாக குபேரா படம் வெளியான நிலையில் அடுத்தடுத்து தமா மற்றும் தி கேர்ள்ஃப்ரண்ட் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து மூன்று படங்கள் 1000 கோடிகள் ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்தது ராஷ்மிகாவிற்கு பெரும் வரவேற்பைப் சினிமா வட்டாரத்தில் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த புஷ்பா படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அந்த கதாப்பாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி புஷ்பா தி ரைஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி புஷ்பா 2 தி ரூல் படம் வெளியானது.
ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது:
இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்திலும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீ வள்ளி என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்து இருந்தார். புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் கூலிக்கு செம்மரங்களை வெட்டும் தொழிலாளியாக இருப்பவர் புஷ்பராஜ். இவர் ஸ்ரீ வள்ளியை காதலிப்பார். அந்த முதல் பாகத்தில் க்ளைமேக்சில் பெரிய கடத்தல் தலைவராக மாறிய பின்பு ஸ்ரீ வள்ளியை திருமணம் செய்துக்கொள்வார்.




முதல் பாகத்தில் ஸ்ரீ வள்ளியின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனத்தைப் பெறவில்லை என்றாலும் இரண்டாம் பாகத்தில் பெரிய கேங்ஸ்டரான புஷ்பாவின் மனைவி ஸ்ரீ வள்ளி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அந்த ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் இணையத்தில் அதிமாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னால் புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீ வள்ளி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போ யாரோ ஒருவர் சொன்னது, உங்களை இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்த இயக்குநருக்கு தெரியாதா நீங்க நடிப்பீங்களா இல்லையானு.
உங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான அந்த இயக்குநர் இந்த கதாப்பாத்திரத்தை உங்களுக்கு கொடுத்து இருக்கிறார். அவரது நம்பிக்கையை நீங்கள் சந்தேகிக்கலாமா என்று கூறினர். உங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத ஏதோ ஒன்று இயக்குநருக்கு தெரிந்து உள்ளது என்று அவர் அப்போது கூறியது தற்போது உண்மையாகி விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
புஷ்பா படம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram