Mandaadi: சூரியின் மண்டாடி பட ‘உசுரே நீதான் புள்ள’ பாடல் புரோமோ வெளியீடு!
Usure Needhan Pulla Song Promo: தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தற்போது ரசிக்கப்பட்டுவரும் ஹீரோவாக இருப்பவர் சூரி. இவர் இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் நடித்திருக்கும் புது படம்தான் மண்டாடி. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் உருவான இப்படத்தின் 2வது பாடலின் புரோமோ வீடியோ வெளியானது.
கோலிவுட் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து, தற்போது சினிமாவில் லீட் நடிகராக படங்களில் நடிக்க தொடங்கியவர்தான் சூரி (Soori). இவர் முதல்வர் விஜய் முதல் விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வகையில், இவர் இயக்குநர் வெற்றிமாறனின் (Vetri Maaran) இயக்கத்தில் வெளியான விடுதலை 1 (Viduthalai 1) படத்தின் மூலமாக நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகும் படங்களில் நடிகராகவே நடிக்க தொடங்கிவிட்டார். அந்த விதத்தில் இவர் ஹீரோவாக நடித்து இறுதியாக ஹிட் கொடுத்த படம் மாமன் (Maaman). பேமிலி பொழுதுபோக்கு கதையில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு பின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் (Mathimaran Pugazhendhi) இயக்கத்தில் மண்டாடி (Mandaadi) என்ற படத்தில் இணைந்து நடித்துவந்தார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் “மண்டாடி மண்டாடி” என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியானது. அதை தொடர்ந்த, “உசுரே நீதான் புள்ள” என்ற 2வது பாடலை வெளியிடப்படவுள்ளது. இதை முன்னிட்டு தற்போது அப்பாடலின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: சாமியா வேண்டாம் ஒரு மனுஷியா பாருங்க… நூறு சாமி படத்தை ஏன் கொண்டாட வேண்டும்? விமர்சனம் இதோ
மண்டாடி படத்தின் உசுரே நீதான் புள்ள பாடல் புரோமோ குறித்து வெளியான எக்ஸ் பதிவு:
#Mandaadi second single, “Usure Needhan Pulla,” releasing Tomorrow 7pm 🎶
Starring : @sooriofficial @Mahima_Nambiar
Sung By : @KapilKapilan_ @SanjanaKalmanje
A @gvprakash musical 🎼
Lyricist : @JayashreeRD#Mandaadi in cinemas worldwide on September 10, 2026. 🎬🔥#Suhas… pic.twitter.com/otx7phiI1F
— RS Infotainment (@rsinfotainment) August 13, 2026
மண்டாடி திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் சென்சார் அப்டேட்:
இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில், ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உருவாக்கப்பட்டுவருகிறது. இதில் நடிகர் சூரி லீட் நடிகராக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் நடிகர்கள் சத்யராஜ், ரவீந்திர விஜய், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: இசையமைப்பில் அழுத்தம் இருக்கிறதா? – விளக்கமாக பேசிய அனிருத்!
இந்த படமானது முழுக்க கடற்கரை மற்றும் கப்பல் போட்டியை சார்ந்த ஒரு கேங்ஸ்டர்ஸ் கதையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் சூரி லீட் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், பல ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் உள்ளது. இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆக்ஸட் மற்றும் அதிரடி கதையில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், யு/ஏ தரச் சான்றிதழ் இப்படத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.