AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாமியா வேண்டாம் ஒரு மனுஷியா பாருங்க… நூறு சாமி படத்தை ஏன் கொண்டாட வேண்டும்? விமர்சனம் இதோ

Nooru Sami Movie OTT Review Here | தமிழ் சினிமாவில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடிஅயே கவனத்தை ஈர்த்த படம் நூறு சாமி. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சாமியா வேண்டாம் ஒரு மனுஷியா பாருங்க… நூறு சாமி படத்தை ஏன் கொண்டாட வேண்டும்? விமர்சனம் இதோ
நூறு சாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Aug 2026 18:45 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராக தொடர்ந்து சிறந்த படங்களை கொடுப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றார். இந்த நிலையில் இயக்குநர் சசி உடன் இணைந்து நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் நூறு சாமி. பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் இந்த கூட்டணி அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் என்பது நாயகியாக நடித்து உள்ள சுவாஸிகாவின் செல்வி என்ற கதாப்பாத்திரமும் அவரின் மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல், முனிஷ்காந்த், காவ்யா அனில், அருள்தாஸ், பகவதி பெருமாள், பதின் குமார், ஜென்சன் திவாகர், வினோதினி வைத்தியநாதன், தாமரை, முத்து அழகி, கோடாங்கி வடிவேலு, அபிநயா, சாரதா, சபிதா ராய், சுப்ரமணியம் சிவா மற்றும் மூர்த்தி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நூறு சாமி படத்தை ஏன் கொண்டாட வேண்டும்?

ஸ்வாசிகா திருமணமாகி இரண்டு சிறு குழந்தைகள் இருக்கும் போது அவரது கணவர் உயிரிழந்துவிடுகிறார். தொடர்ந்து தனது மகன்களான அஜய் திஷன் மற்றும் சக்தி இருவரையும் வளர்ப்பதிலேயே தனது வாழ்க்கையை கொண்டு செல்கிறார். 26 வயதில் கணவரை இழந்த அந்த ஸ்வாசிகா தனக்கு என்று ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என ஒரு கட்டத்தில் நினைக்கிறார். ஆனால் முதலில் அவரது மகன்கள் அதனை எதிர்த்தாலும் பிறகு ஸ்வாசிகாவின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவருக்கு ஒரு வாழ்க்கை துணையை அமைத்து தர முடிவு செய்கிறார்கள்.

Also Read… அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் – நடிகர் சூர்யா ஓபன் டாக்

அப்படி தேடி கண்டுபிடிக்கும் மாப்பிள்ளைதான் விஜய் ஆண்டனி. இவர்களின் திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் ஊர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அவரது மகன்கள் எப்படி அதனை சமாளித்து திருமணம் செய்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்தப் படத்தை திரையரங்குகளில் மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் மிஸ் செய்யாமல் பாருங்கள்.

Also Read… இந்த வயதில் எதுக்கு இத்தனை நாடகம்… வைரலாகும் த்ரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டா பதிவு!

Follow Us