ஒரு சில சலுகை எல்லாம் இந்த புது மாப்பிள்ளைக்குதான் கிடைக்கும்… கலகலப்பாக வெளியானது மொத ராத்திரி பட ட்ரெய்லர்!
Modha Rathri Movie Official Trailer | தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் மொத ராத்திரி. இந்த நிலையில் மிகவும் கலகலப்பாக தற்போது படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈத்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் அதிக அளவில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்து தற்போது நாயகனாக நடிக்கத் தொடங்கி உள்ளார் ரிஷிகாந்த். கடந்த 2015-ம் ஆண்டு முதல் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர் தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து உள்ளார். நடிகர் ரிஷிகாந்த் பெரிய அளவில் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் அவர் நடிக்கும் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. சமீபத்தில் நடிகர் ரிஷிகாந்த் நடித்த நம்ம செய்தி என்ற ஒரு இணையதள தொடர் இணையத்தில் வெளியானது. அதன்படி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான அந்த இணையதள தொடர் மிகவும் சுவாரஸ்யமான கதைகளத்தை கொண்டு இருந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ரிஷிகாந்த் தற்போது நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் உருவாகி உள்ள படம் மொத ராத்திரி. ரூரல் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த மொத ராத்திரி படத்தை இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கி உள்ளார். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




கலகலப்பாக வெளியானது மொத ராத்திரி பட ட்ரெய்லர்:
அதன்படி இந்த ட்ரெய்லரை பார்க்கும் போது திருமணம் ஆண இளம் ஜோடிகளுக்கு நடக்கும் மொத ராத்திரியை மையமாக வைத்தே இந்தப் படத்தின் ட்ரெய்லர் இருப்பது தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நாயகியாக அனிஷ்மா அனில் குமார் நாயகியாக நடித்து இருந்தார். இவர்கள் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அந்த சம்பவத்திற்கு பிறகு என் அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் – நடிகர் சூர்யா ஓபன் டாக்
மொத ராத்திரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Vanakkam…Kalyanam ku polama? 🤩🤩
The most entertaining and chaotic wedding is here 💥💥#ModhaRathri Trailer out now ❤🔥
▶️https://t.co/WbIxiRzRarIn Cinemas worldwide on 21st August 💥#KudumbaPadam#MythriTamil03@MythriOfficial #RajaKaruppasamy @iam_rishikanth… pic.twitter.com/KmOPkHiuIa
— Mythri Movie Makers (@MythriOfficial) August 13, 2026
Also Read… வாழ வேணும் நாம மழ காத்து பூமியா… 10 ஆண்டுகளைக் கடந்தது ஜோக்கர் படம் – கொண்டாடும் படக்குழு