AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்திலிருந்து வெளியானது ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோ

Oru Pere Varalaaru (Tamil) Full Video | தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் இருந்து ஒரு பேரே வரலாறு என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்திலிருந்து வெளியானது ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோ
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2026 20:17 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டு அரசியலில் கலக்கி வருபவர் தளபதி விஜய். இவர் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலிலேயே அதிக இடங்களில் வெற்றிப் பெற்று  தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். தளபதி விஜய் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு இறுதியாக தமிழ் சினிமாவில் நடித்த படம் ஜன நாயகன். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகவேண்டியது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக படம் திரையரங்குகளில் வெளியாக தாமதம் ஏற்பட்டது. தளபதி விஜய் நடிகராக இருந்த போது உருவான ஜன நாயகன் படம் அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆன பிறகு திரையரங்குகளில் வெளியானது. அதன்படி படம் கடந்த 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் எச் வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்த நிலையில் இந்தப் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

வெளியானது ஒரு பேரே வரலாறு பாடல் வீடியோ

மேலும் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து ஒவ்வொரு வீடியோ பாடலாக தற்போது வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது ஜன நாயகன் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் இசையில் ஒரு பேரே வரலாறு என்ற பாடல் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி உள்ள நிலையில் பாடகர்கள் விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஐ அம் கேம் படத்திலிருந்து வெளியானது முதல் சிங்கிள் அருகே அருகே – வைரலாகும் வீடியோ

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலைக்கு எண்டு கார்டு? அடுத்த CM தனுஷா, விஜய்யா? ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் போட்ட குண்டு!

Follow Us