தனுஷின் படத்தைப் பார்த்து பாராட்டிய தளபதி விஜய் – என்ன படம் தெரியுமா?
Thalapathy Vijay watched Thiruchitrambalam and praised Dhanush | தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக உள்ளவர் விவேக். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தளபதி விஜய் நடிகர் தனுஷின் படத்தை தியேட்டரில் சென்று பார்த்தது குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக உருவாகி திரையரங்குகளில் தற்போது வெளியாகி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் ஒன் லாஸ்ட் டைம் என்று தளபதி விஜயின் நடிப்பையும் ஜன நாயகன் படத்தையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். மேலும் ஜன நாயகன் படம் பல பிரச்சனைகளை சந்தித்தது மட்டும் இன்றி தொடர்ந்து படம் முழுவதும் இணையத்தில் கசிந்தும் ரசிகர்கள் அந்தப் படத்திற்கு மாபெரும் வரவேற்பைப் கொடுத்து வருவது சினிமா வட்டாரங்களில் பிரமிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் ஜன நாயகன் படத்தில் பணியாற்றியவர்கள் தொடர்ந்து படம் தொடர்பாகவும் தளபதி விஜய் தொடர்பாகவும் பேசி வருவது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் விவேக் இந்த ஜன நாயகன் படத்தில் பல பாடல்களை எழுதி உள்ளார். அவரது எழுத்தில் வெளியான பாடல்கள் ஜன நாயகன் படத்தில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவெற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




தனுஷின் படத்தைப் பார்த்து பாராட்டிய தளபதி விஜய்:
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் திருச்சிற்றம்பலத்தைப் பார்த்துவிட்டு அடுத்த நாளே தளபதி விஜய் சாரைச் சந்தித்தேன். எப்போ போய் பாத்தா நீ..? ஏன் என்ன எல்லாம் கூப்பிடா மாட்டியா..? என்று விஜய் சார் கேட்டார். உங்கலுக்கு சேஃப்டி இருக்கு ல சார் என்று நான் சொன்னதும், அதெல்லாம் ஒண்ணும் இல்ல என்று நீ புக் பண்ணு… இப்போ நீ புக் பண்ணு என்று அவர் வற்புறுத்தியதால் நான் டிக்கெட்டுகளை மகேஷ் பாபு சாரின் ஏஎம்பி மாலில் புக் செய்தேன்.
விஜய் சார் எல்லாவற்றையும் சூப்பரா திட்டமிட்டு, ஒரு தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்துவிட்டு வந்தார். நாங்கள் படம் பார்க்க சென்றோம். படம் முடிந்ததும், உடனே தனுஷ் சாருக்கு போன் செய்து, படம் ரொம்ப நல்லா இருந்துது… ரொம்ப நல்லா பண்ணிருக்கீங்க என்று விஜய் சார் பாராட்டினார் என்று விவேக் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது… வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Lyricist #Vivek in a Recent Interview ⭐:
• I watched Thiruchitrambalam in a theatre in Hyderabad and met #ThalapathyVijay sir the very next day. He asked, “Eppo poi paatha nee..? Yen enna ellam koopida maatiya..?”
• I replied, “Ungalukku safety irukku la sir…” He said,… pic.twitter.com/cUaXgJmzvb
— Laxmi Kanth (@iammoviebuff007) July 24, 2026