AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தில் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள்… அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி

Actress Anandhi released a video in tears | தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் நடிகை ஆனந்தி அஜய் சமீபத்தில் வெளியான ஜன நாயகன் படத்தில் தனது காட்சிகள் நீக்கப்பட்டதாக அழுதுகொண்டே வீடியோவை வெளியிடுள்ளார். அது வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படத்தில் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள்… அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி
நடிகை ஆனந்தி அஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jul 2026 16:04 PM IST

தமிழ் சின்னத்திரையில் வெளியான பல ஹிட் சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார் நடிகர் ஆனந்தி அஜய். விஜய் தொலைக்காட்சியில் வெளியான கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் என்ற சீரியல் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஆனந்தி அஜய். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கனாக் காணுக் காலங்கள், யமுனா மற்றும் கார்த்திகை பெண்கள் என பல சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரையில் நடைப்பெற்ற நடன போட்டிகளிலும் கலந்துகொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து சின்னத்திரையில் பிரபலமான நடிகை ஆனந்தி அஜய் பிறகு வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகை தற்போது முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தாரதப்பட்டை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி 2 படத்தில் முக்கிய வேடத்டில் நடித்து இருந்தார். மேலும் அந்தப் படத்தில் இவரது நடிப்பும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தில் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள்:

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை ஆனந்தி அஜயும் நடித்து உள்ளார். ஆனால் நேற்று படத்தைப் பார்த்த நடிகை ஆனந்தி அஜய் அவரது காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்துக்கொண்டார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி அஜய் தான் நடிக்கும் பலப் படங்களில் காட்சிகள் நீக்கப்படும். ஆனால் இது தளபதி விஜய் நடிக்கும் இறுதிப் படம் இதில் எனது நடிப்பு இடம்பெறாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இனி அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என்று வருத்தத்துடன் அழுதுக்கொண்டே வீடியோ வெளியிட்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழு

இணையத்தில் வைரலாகும் நடிகை ஆனந்தி அஜயின் வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Anandhi Ajay (@anandhi_offl)

Also Read… பான் இந்திய மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

Follow Us