AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழு

Actor Suriya Birthday Special Posters | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் தொடர்ந்து போஸ்டர்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருவது வைரலாகி வருகின்றது.

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழு
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jul 2026 15:49 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது தொடர்ந்து வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியான கருப்பு படம் ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து சிறப்பான தொடக்கத்தை தொடங்கி வைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சூர்யா 47 மற்றும் சூர்யா 48 ஆகியப் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் முதலாவதாக நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படம் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா அவரது 48-வது படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகின்றார். இந்தப் படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்தும் படக்குழு:

இந்த நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழுவினர் மற்றும் சூர்யா 47 படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மற்ற திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருவது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒன் லாஸ்ட் டைம்… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்

சூர்யா 47 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியான ஜன நாயகன் படம் எப்படி இருக்கு? மக்கள் கொடுத்த ரிவியூ!

Follow Us