AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நேருக்கு நேர் முதல் கருப்பு படம் வரை… பர்த்டே பாய் சூர்யாவின் சினிமா பயணம் இதோ!

Here is the cinema journey of Birthday Boy Suriya | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இன்று இவர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது சினிமா பயணத்தை தற்போது பார்க்கலாம்.

நேருக்கு நேர் முதல் கருப்பு படம் வரை… பர்த்டே பாய் சூர்யாவின் சினிமா பயணம் இதோ!
சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jul 2026 11:14 AM IST

தமிழ் சினிமாவில் பழபெரும் நடிகர் சிவக்குமாருக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்த மகன் தான் நடிகர் சூர்யா. இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி மற்றும் மூன்றாவதாக ஒரு மகளும் உள்ளார். சிவக்குமாரின் குடும்பத்தில் இருந்து அவரது இரண்டு மகன்களும் சினிமாவில் நாயகன்களாக எண்ட்ரி கொடுத்தனர். அதில் மூத்த மகன் சூர்யா (Actor Suriya) தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு நடிகராக தனது பணியைத் தொடங்கவில்லை. ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார். தொடர்ந்து அந்த வேலையை செய்து வந்த நடிகர் சூர்யா பிறகு சினிமாவிற்குள் காலடி வைத்தார். இவர் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்தே தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சரவணன் நடிகர் சூர்யா ஆனது எப்படி?

தமிழ் சினிமாவில் கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 06-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது நேருக்கு நேர் படம். இயக்குநர் வசந்த் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். நடிகர் விஜய் இந்தப் படத்தில் நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். சூர்யாவின் இயற்பெயர் சரவணன். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருந்த இயக்குநர் மணிரத்னம் தான் சரவணன் என்ற பெயரை சூர்யா என்று மாற்றினார். மேலும் திரையுலகில் இருப்பவர்கள் இவரை சூர்யா என்று அடையாளப்படுத்த தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் சினிமா வாழ்க்கையை மாற்றிய நந்தா படம்:

நேருக்கு நேர் படத்தின் மூலம் சூர்யா நடிகராக அறிமுகம் ஆன நிலையில் அதனை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வந்தார். ஆனால் அவரது சினிமா வாழ்க்கையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது என்னவோ இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான நந்தா படம் தான். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கை மாறியது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஆக்‌ஷன் படங்களும் உருவானது. தற்போது வரை ரொமாண்டிக் நாயகனாக மட்டும் இன்றி ஆக்‌ஷன் நாயகனாகவும் சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தியேட்டரில் மட்டும் இல்லாமல் ஓடிடியிலும் ஹிட் அடித்த சூர்யா:

திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியான போது பெரிய அளவில் வரவேற்பைப் பெறுவது இல்லை. ஆனால் நடிகர் சூர்யாவின் படங்கள் அப்படி இல்லை. அவரது படங்கள் ஓடிடியிலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி நேரடியாக ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படப்பிடிப்பில் மமிதா பைஜூவிற்காக பேசிய தளபதி விஜய் – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

உச்ச நாயகனாக கலக்கி வரும் நடிகர் சூர்யா:

நடிகர் சூர்யா நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 45 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இறுதியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சூர்யா 47 மற்றும் சூர்யா 48 ஆகியப் படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவை விட்டு நடிகர் தளபதி விஜய் விலகிய நிலையில் இனி அந்த இடத்தை யார் நிறப்புவார் என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலர் நடிகர் சூர்யா அந்த இடத்தை நிறப்ப தகுதியானவர் என்று தெரிவித்து வருகின்றனர். மேலும் உச்ச நடிகராக மக்கள் கொண்டாடும் நாயகனாக உள்ள சூர்யா இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டிவி 9 தமிழ் நியூஸ் சார்பாக நடிகர் சூர்யாவிற்கு ஹேப்பி பர்த்டே!

Also Read… இதயம் முரளி படத்தில் ஃபகத் பாசில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் இல்லை – இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்

Follow Us