AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படப்பிடிப்பில் மமிதா பைஜூவிற்காக பேசிய தளபதி விஜய் – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

Mamitha Baiju is like Lady Vijay sir | தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருந்த படம் ஜன நாயகன். படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் எச் வினோத் அளித்தப் பேட்டி இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படப்பிடிப்பில் மமிதா பைஜூவிற்காக பேசிய தளபதி விஜய் – இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2026 14:21 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ள நிலையில் இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இவரது நடிப்பில் படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது என்றாலும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் படம் தான் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச் வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் நாளை 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் இயக்குநர் எச். வினோத் தொடர்ந்து பலப் பேட்டிகளில் கன நாயகன் படம் குறித்தும் படத்தில் நடித்த நடிகர்கள் குறித்தும் தொடர்ந்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் எச். வினோத் தளபதி விஜய் குறித்தும் நடிகை மமிதா பைஜூ குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன் படப்பிடிப்பில் மமிதா பைஜூவிற்காக பேசிய தளபதி விஜய்:

பிரேமலு படத்தைப் பார்த்த பிறகு, மமிதா பைஜுவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜன நாயகன் படத்தில் மகளாக நடிக்க ஸ்ரீலீலா அல்லது மமிதா – இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நாங்கள் விவாதித்தோம். இறுதியில் அனைவருமே மமிதாவையே தேர்ந்தெடுத்தனர். அவர் கிட்டத்தட்ட ஒரு லேடி விஜய் போல இருக்கிறார். டியூட் படத்தில் அந்தப் பாத்திரத்தின் தன்மை காரணமாக வேறு எந்த நாயகியாக இருந்தாலும் அதை நிராகரித்திருக்கக்கூடும். ஆனால், மமிதாவுக்குச் சண்டைக்காட்சிகளில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்குமாறு விஜய் சார் கேட்டுக்கொண்டார் என்று இயக்குநர் எச். வினோத் தெரிவித்துள்ளார்.

Also Read… H Vinoth: ஜன நாயகனில் அந்த காட்சிகளை விஜய் சார்தான் இயக்கியிருந்தார் – எச். வினோத் தெரிவித்த விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் பாலையா மருத்துவமனையில் அனுமதி – படக்குழு வெளியிட்ட பதிவு

Follow Us