AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

See U: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் சீயூ படத்தின் ‘ஏகாந்தம்’ என்ற முதல் பாடல் வெளியீடு!

Yegandham Song: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிஷன் தாஸ். முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமான இவர், தற்போதும் ஹீரோவாகவே படங்களில் பணியாற்ற தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் நடித்துவரும் படம்தான் சீயூ. இந்த படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இன்று (10/09/2026) இப்படத்திலிருந்து ஏகாந்தம் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

See U: கிஷன் தாஸ் – சஞ்சனாவின் சீயூ படத்தின் ‘ஏகாந்தம்’ என்ற முதல் பாடல் வெளியீடு!
ஏகாந்தம் பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 10 Sep 2026 21:07 PM IST

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கிஷன் தாஸ் (Kishan Das). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான படம் ஆரோமலே (Aaromaley). இந்த படத்தை இயக்குநர் சாரங் தியாகு இயக்க, மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பீல் குட் கதைக்களத்தில்உருவான இப்படமானது 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பின் கிஷன் தாஸ் நடித்துவரும் புதிய திரைப்படம்தான் சீயூ (SeeU) . இந்த படத்தை இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவட்சன் (Santhosh Srivatsan) இயக்க, தயாரிப்பாளர் விஜய் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கிஷ்தாஸ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) நடித்துவருகிறார்.

மேலும் இதில் எம்எஸ் பாஸ்கர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுவரும் நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸினீம் இசையமைக்க, இப்படத்திலிருந்து “ஏகாந்தம்” (Yegandham) என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: யோகி பாபுவின் நடனத்தில்… ரவி மோகனின் இயக்கத்தில் உருவான அன் ஆர்டினரி மேன் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

சீயூ திரைப்படத்திலிருந்து வெளியான ஏகாந்தம் என்ற பாடலின் எக்ஸ் பதிவு:

சீயூ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?:

நடிகர் கிஷன்தாஸ் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சில குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், முதல் நீ முடிவும் நீ என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். கடந்த 2022ம் ஆண்டில் வெளியான இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் சிங்கப்பூர் சலூன் மற்றும் தருணம் போன்ற படங்களிலும் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள மாதவனின் ஜிடிஎன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இவரின் நடிப்பில் சிறப்பான கதைக்களத்தில் வெளியான படம் ஆரோமலே. இப்படம் 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இதற்கு பின் சீயூ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், 2026ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. காதல் மற்றும் எமோஷனல் போன்ற கதைக்களத்தில் உருவான இப்படம் 2026ம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us