ஆசிய கோப்பை 2026: அபார பந்துவீச்சு – 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அபார வெற்றி
Asia Cup 2026 : வங்க தேச அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களான திலாரா அக்தர் மற்றும் ஜோரியா ஃபெர்டீஸ் ஆகியோர் நிதானமான துவக்கம் தந்தனர். ஆனால் அவர்களது ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அதன் பிறகு களமிறங்கிய ஷோபனா மோஸ்தரி மற்றும் நிகர் சுல்தானா ஆகியோர் இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதனால் தேவைப்படும் ரன் ரேட் 11 ஆக உயர்ந்தது.
ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிரணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய ஷஃபாலி வர்மா 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச மகளிரணி களமிறங்கியது.
திணறிய வங்க தேச வீராங்கனைகள்
வங்க தேச அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களான திலாரா அக்தர் மற்றும் ஜோரியா ஃபெர்டீஸ் ஆகியோர் நிதானமான துவக்கம் தந்தனர். ஆனால் அவர்களது ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. திலாரா அக்தர் 26 பந்துகளில் 21 ரன்களுடன் ஜோரியா ஃபெர்டீஸ் 18 பந்துகளில் 14 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய ஷோபனா மோஸ்தரி மற்றும் நிகர் சுல்தானா ஆகியோர் இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதனால் தேவைப்படும் ரன் ரேட் 11 ஆக உயர்ந்தது.
இதையும் படிக்க : துலிப் டிராபி 2026: கேப்டன் இஷான் கிஷனின் அதிரடி – 13 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கிழக்கு மண்டலம்




இந்த நிலையில் சீரான இடைவேளைகளில் வங்க தேச அணியினர் விக்கெட்டுகளை பறிகொடுக்க துவங்கினர். ஷோபனா மோஸ்டரி 18 ரன்களுடும், நிகர் சுல்தானா 18 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷர்மின் அக்தர் வெறும் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் – ஹர்ஷித் ரானாவுக்கு புதில் யாஷ் தாக்கூர் தேர்வு
கடைசி கட்டத்தில் இந்திய அணியை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் வங்க தேச அணி 7 விக்கெட்டுகள் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இந்திய மகளிரணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சொர்னா அக்தர் 22 ரன்கள் எடுத்திருந்தார்.