AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

துலிப் டிராபி 2026: கேப்டன் இஷான் கிஷனின் அதிரடி – 13 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கிழக்கு மண்டலம்

Duleep Trophy Drought Ends : சென்னையில் நடைபெற்ற 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டியில், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. சுமார் 13 ஆண்டுகள் கழித்து கிழக்கு மண்டலம் மீண்டும் துலீப் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

துலிப் டிராபி 2026:  கேப்டன் இஷான் கிஷனின் அதிரடி  – 13 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கிழக்கு மண்டலம்
துலிப் டிராபி
Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Sep 2026 16:49 PM IST

சென்னையில் நடைபெற்ற 2026 துலீப் டிராபி இறுதிப்போட்டியில், இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் 2012-13 சீசனுக்குப் பிறகு, சுமார் 13 ஆண்டுகள் கழித்து கிழக்கு மண்டலம் மீண்டும் துலீப் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்ததும் இஷான் கிஷனுடன் இணைந்து கையில் ஸ்டம்புகளை வைத்துக்கொண்டு வைபவ் சூர்யவன்ஷி நடனமாடிய காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

13 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியனான கிழக்கு மண்டலம்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதையும் படிக்க : VIDEO : 47 வயதில் கெத்து காட்டும் இம்ரான் தாஹிர்.. சிபிஎல் தொடரில் உலக சாதனை

அதன்பிறகு கேப்டன் இஷான் கிஷன் களத்தில் அதிரடி ஆடி 270 ரன்கள் குவித்தார். அவருடன் ஆடிய குமார் குஷாக்ரா 101 ரன்களும், ஷிகர் மோகன் 85 ரன்களும் எடுத்தனர். இதனால் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 708 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தெற்கு மண்டல அணிக்கு ஆரம்பம் முதலே நெருக்கடி ஏற்பட்டது. கேப்டன் திலக் வர்மா மட்டும் போராடி 99 ரன்கள் குவித்தார். அவருடன் தேவ்தத் படிக்கல் 62 ரன்கள் எடுத்தார். ஆனால் மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால், தெற்கு மண்டல அணி 336 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கிழக்கு மண்டல அணியின் சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், முகமது குனைன் குரைஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனால் கிழக்கு மண்டலத்திற்கு முதல் இன்னிங்ஸில் 372 ரன்கள் முன்னிலை கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்தது. இஷான் கிஷன் மீண்டும் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் எடுத்தார். முகமது குனைன் குரைஷி அபாரமாக பேட்டிங் செய்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 116 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அனுகுல் ராய் 64 ரன்கள் எடுத்தார். குரைஷி மற்றும் அனுகுல் ராய் இணைந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். இந்த நிலையில் கிழக்கு மண்டலம் 388 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

இதையும் படிக்க :  IND A vs AUS A: காத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா.. உள்ளூர் போட்டிகளில் பிசிசிஐ கொடுத்த வாய்ப்பு..! உடற்தகுதி பெறுவாரா?

இந்த நிலையில் தெற்கு மண்டல அணியை விட, கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 372 ரன்கள் முன்னிலை வகித்தது. இதன் காரணமாக கிழக்கு மண்டலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியின் வெற்றிக்கு கேப்டன் இஷான் கிஷன் மிக முக்கிய காரணமாக அமைந்தார். முதல் இன்னிங்ஸில் 270 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 80 ரன்களும் என மொத்தம் 350 ரன்கள் குவித்தார்.

Follow Us